உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

ஆசக்தி,- யதுதான் துன்ப
மனைத்துக்கும் மூல மாகும்!
பாசக்தி யான என்தாய்
பாரதி யருளால் கொஞ்சம்
நாசக்தி யுற்ற துன்னை
நான்மன்னித் தாவ தன்று;
மாசக்தி யம்பாள், பார்த்து
மன்னிக்கு மென்ற தாம்புல்.

சொல்லுக்குச் சொல்தான் நல்ல
சொக்கப்பொன் னொக்கச் சொல்லும்
புல்லுக்கு நிகராய்ச் சொல்லப்
புவியிலே புலவ னில்லை;
சல்லிக்கா சுக்கா கேன்நான்;
சாத்திர முதல்வீ! புல்லை
மல்லுக்கின் றிழுத்த குற்றம்
மன்னிப்பா யென்ற தன்றால்!