95
உளவொன்று காணும் போதும்
உதவுவ தளவா முற்றுக்
களவொன்று காணும் போதும்
காப்பதூ மளவாம் ; கல்வித்
தெளிவொன்று பெறஇங் குற்ற
தெரிவையே! யெதுசெய் தாலும்
அளவொன்று வேண்டு' மென்றும்
அறிவித்தா ரான்ருே ரன்றே !
திலகத்தை நெற்றிக் கிட்டுத்
தித்திக்க முறுவல் பூத்திங்
கிலகொத்துக் கமழுங் கூந்தல்,
இரும்பொத்த இதயப் பாவாய்!
கலகத்தை விளைவித் துத்தம்
காரியம் சாதிப் பார்க்கும்
உலகத்தின் கண்ணைக் கட்டற்
கொருபோது மொல்லா தன்றே?
சாத்திர மனைத்துங் கற்றுச்
சாதெனும் பேரும் பெற்றே
ஆத்திகம் பெருக்கா நிற்கும்
அறுகினை யொருநாள் கோரை,
நேத்திர முள்ளோர் செல்லும்
நெறியிஃதன்' றெனவே , நின்று
நாத்திகம் பெருகிற் றென்றே
நாப்பறை யடித்த தாம்புல்,
கோரையும் குடியா யொன்றிக்
கூடவே வசிப்ப தெண்ணி,
யாரையும் பகைத்துக் கொள்ளும்
அகமின்றி யறுகு கோரை
பேரையே கெடுக்கு' மென்றும்
பேதுற்றுப் பெரும்பா டாகி
ஊரையு முவப்பித் தற்கா
யொருநாளோர்ந் துன்னிற் றப்புல்
95