இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
99
அடுக்கிட்ட அறுகின் வாய்ச்சொல்
அகங்கொளக் கேட்ட ஆலும்
திடுக்கிட்ட வாறே நின்று
திகைத்தது; தீர்ந்தோ மென்றே
'கொடுக்கிட்ட கருந்தேள் கொட்டால்
குழந்தையும் குமுறிற் றென்ன
நடுக்கிட்டு நலிந்த தங்கே
நகைத்தது, நரியா யப்புல்:
அச்சமிஃ தொன்றே துன்ப
மனைத்துக்கும் மூல' மென்று
நிச்சயித் துள்ளா ரன்றே
நெறிநின்ற மேலோர் ! நீயும்
உச்சிநீண் டுடல்ப ருத்தும்
உள்ளத்தி லுரம்பற் றாதே
பச்சிளம் பயிரைப் போன்று
பயப்படு கின்றா” யென்றே!