பக்கம்:அறப்போர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


இழிவாகக் கருதவில்லை. அப்படிக் கருதியிருந்தால் உறுப்புக் குறையைச் சுட்டும் பெயர்களைப் புலவர்களுக்கு இட்டு வழங்குவார்களா? முடமோசி யென்று முடப் புலவரைச் சுட்டுவதில் இழிவுக் குறிப்பிருந்தால் அதை நூலில் எழுதுமளவுக்குக் கொண்டு வருவார்களா? கரிகாலன் என்று ஒரு சக்கரவர்த்திக்குப் பெயர். அது அவனுடைய சொந்தப் பெயர் அல்ல. அவன் கால் கரிந்து போனமையால் அந்தப் பேர் வந்தது. இந்தக் காலத்தில் அப்படிப் போட்டு அழைத்தால் அழைப்பவன் நாக்குக் கரிந்துவிடும். அக்காலத்தில் அதை இழிவாகக் கருதவில்லை. அந்தப் பெயரைப் பாட்டில் வைத்துப் பாடினார்கள்; மற்றவர்களுக்கும் வைத்தார்கள். இமை நீண்ட புலவரை நெட்டிமையார் என்று வழங்கும் வழக்கமும் இந்த வகையில் சேர்ந்ததே.

நெட்டிமையார் முதுகுடுமியை வாழ்த்தப் புகுந்தார். அவனுடைய நல்லியல்பை எடுத்துக் கூறி, நீ நீண்ட நாள் வாழ்வேண்டுமென்று சொல்ல எண்ணினார். அவன் பல சிறந்த இயல்புடையவன். அந்த இயல்புகளுக்குள் எதை இப்போது சொல்லலாமென்று ஆராய்ந்தார். அவன் வாழவேண்டும்; அவனால் நாடு முழுவதும் வாழவேண்டும். புலவர், உலகத்தில்

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/46&oldid=1267420" இலிருந்து மீள்விக்கப்பட்டது