பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அகநானூறு - மணிமிடை பவளம்



இப்பாட்டினைப் பிற்கூறிய இரண்டு துறைக்கும் கொள்ளின், குறிஞ்சி ஒழுக்கமாம்.

‘நாம் அல்ல குறிப்பட்டது தலைவியது மெலிய நெஞ்சத்தையும் தோழியது வலிய நெஞ்சத்தையும் ஒரு சேர நெகிழ்விக்கும் என்று ஆற்றினானாம்' என்று, பிற்கூறிய முறைக்கு ஏற்பப் பொருள் உரைத்துக் கொள்க. பாண் மகளது வாளை மீனை நெல்முகவைக்குப் பெறாரேனும், முத்தத்திற்கும் நன்கலனுக்கும் பெற்றாற்போல, நாம் தலைவியைக் குறையிர்த்தலாற் பெறேமாயினும், நன்கலன் நல்கிப் பெறுவேம் என்று தலைமகன் ஊக்கத்துடன் சொல்லி ஆற்றினானாகக் கொள்ளலும் கூடும். -

மேற்கோள்: மெய் தொட்டுப் பயிறல் என்னும் களவியற் சூத்திரத்து, மற்றைய வழியும் என்னும் பகுதிக்கு இப் பாட்டினைக் காட்டி, ‘இது நெஞ்சினை இரவு விலக்கியது” என்பர் நச்சினார்க்கினியர்.

பாடபேதங்கள்: 1. நின்செயல். 4. ப்பரப்பிக் 6. அறல் வாழ், 7, போகிய தன்னையர். 12 கலந் தரூஉம் 17, விளிகுவை கொல்லோ சொன்மோ?

127. வழிநாள் தங்கலர்!

பாடியவர்: மாமூலனார். திணை: பாலை, துறை: பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. சிறப்பு: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் வென்றி மேம்பாடு.

(பொருள் தேடிவரச் சென்றிருந்த தலைவன் வராதது கண்டு வாடி மெலிந்தாள் தலைவி. அவள் வருத்தத்தைப் போக்குமாறு, தோழி இப்படி அவளுக்கு உறுதிசொல்லித் தேற்றுகிறாள்)

        இலங்குவளை நெகிழச் சாஅய், அல்கலும்,
        கலங்களுர் உழந்து, நாம் இவண் ஒழிய
        வலம்படி முரசின் சேர லாதன்
        முந்நீர் ஒட்டிக் கடம்புஅறுத்து, இமயத்து
        முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து, 5

        நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
        பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
        பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
        ஒன்றுவாய் நிறையக் குவைஇ, அன்றவண்
        நிலம்தினத் துறந்த நிதியத்து அன்ன, 1O