உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

களிற்றியானை நிரை

௩௯

௧௮-௨௧. விடு விசைக் குதிரை = தூண்டப்பெறு்ம வேகங் கொண்ட குதிரையின், விலங்கு பரி முடுக = எதிர்ப்படுமவற்றை விலங்கி முன் செல்லும் செலவு மிக, கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி = கற்களில் மோதி ஒலிக்கும் பல ஆரங்கால்களையுடைய உருளையின் ஒலி, கார் மழை முழக்கிசை கடுக்கும் = கார்காலத்து மழையின் இடி முழக்கினை ஒக்கும், முனைநல்லூரன் புனைநெடுந் தேர் = முனையாகிய நல்ல ஊரிடத்தானாகிய தலைவனுடைய அணிசெயப்பெற்ற நீண்ட தேரினை,

௧௭. கண்டனென் = கண்டேன்.

(முடிபு) 'பாண! எம் தலைவர், மாலையும் உள்ளாராயின், காலை யாங்காகுவம்' என்ற (தலைவி) சொல்லெதிர் சொல்லேன், கடவுள் வாழ்த்தி, அவர்திறம் செல்வேன் முனை நல்லூரன் நெடுந்தேர் கண்டனென்; (எனப் பாணன் பாங்காயினார்க்குக் கூறினான்.)

இரலை உகள, கோவலர் நறும்பூ அயர, நல்லான் புகுதரு மாலை என்க.

(வி - ரை.) அரக்கத்தன்ன: அத்துச்சாரியை. காயாஞ் செம்மல் என மெலிமிக்கது. [1]'யாமரக்கிளவி' என்னும் சூத்திரத்து இலேசாற் கொள்க. காயாஞ் செம்மலுக்கு நீல மணியும், ஈயல் மூதாய்க்குப் பவளமும் உவமையாம்; எதிர் நிரனிறை. ஈயல் மூதாய் - தம்பலப்பூச்சி, இந்திர கோபம். புல்லருந்து - புல்லை அருந்தி, நிறை - நிறைய, காலை - காலம். செவ்வழி - முல்லைப்பண், முனை - பகைப்புலம்.

(மே - ள்.) [2] 'நிலம் பெயர்ந்துறைதல் என்னும்' சூத்திரத்துப் பாணர்க்குக் கூற்று நிகழ்வதற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினா் நச்.

[3]'மனையோள் கிளவியும்' என்னுஞ் சூத்திரத்து, 4'மாலையும். . . பாண' என்னும் இச் செய்யுட் பகுதியை, பாணன் கேட்பத் தலைவி கூற்று வந்ததற்கு எடுத்துக் காட்டினர் பேரா.


15. பாலை

[மகட் போக்கிய தாய் சொல்லியது.]


எம்வெங் காமம் இயைவ தாயின்
மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர்
கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த
பாக லார்கைப் பறைக்கண் பீலித்

௫ தோகைக் காவின் துளுநாட் டன்ன
வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பிற்


  1. தொல். எழுத். ௨௨௯.
  2. தொல். கற்பு. ௨௮.
  3. தொல். செய்ய. ௯௯௬.