உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௫௬

அகநானூறு

[பாட்டு


குழைய முயங்குதொறும் - இனிய உயிர் குழையும்படி முயங்குந் தோறும், ஈண்டு ஏதில் வேலற்கு உலந்தமை கண்டு - இங்கு நமர் யாதும் இயைபில்லாத வேலனுக்கு அழிந்தமை கண்டு, யான் மெய் மலிந்து நக்கனென் அல்லனோ - யான் உடல் பூரித்துச் சிரித்தேன் அல்லனோ.

(முடிபு) நாடன் மார்பு அணங்கிய செல்லல் அறியாப் பொழுதில், நெடு வேட் பேணத் தணிகுவள் இவளென முதுவாய்ப் பெண்டிர் கூற, முருகாற்றுப் படுத்த நடு நாள் வயப்புலிபோலக் காதலர்வர, நசை வாய்ப்ப முயங்குதொறும், வேலற் குலந்தமை கண்டு, நக்கனெ னல்லனோ.

(வி - ரை.) மறுவரல் - சுழற்சி. படியார் - வணங்கார் ; ஆ ஓ வாயிற்று. பிரதியோர் என்னும் சொல்லின் சிதைவுமாம். பல் புகழ் - வென்றி கொடை முதலாயவற்றால் வரும் புகழ். முதுவாய்: முது - அறிவு. அது வாயாக: வாய் - உண்மை . முருகனை ஆற்றுப் படுத்தல், 1குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள், முருகிய நிறுத்து முரணின ருட்க, முருகாற்றுப் படுத்த வுருகெழு வியனகர்' என இவ்வாறே திருமுருகாற்றுப் படையிலும் வருதல் காண்க. புலி களிற்றிரையினைப் பெறுதற்குப் பதுங்கி மறைந்து வருதல் போலத் தலைவன் தலைவியைப் பெறுதற்கு மறைந்து வந்தான் என்க.

1. வெறியெடுத்துத் தீராத வழியில், அஃதியாராலே வந்த தென் றயிராதபடி வரையவந்த பேருதவியினாரைப் பொல்லாங்கு சொல்லக் கடவையோ எனத் தலைவி இயற்பட மொழிந்தாள் என்க.

2, ஈண்டும் தலைவி இயற்பட மொழிந்தாளாயினும் வெறியாட்டு நிகழ்ச்சியைத் தலைவற்கு வெளிப்படுத்தி விரைந்து வரையத் தூண்டுதல் பயனாகும். வெறியாட்டினை அழகு பெறக் கூறும் இச் செய்யுளைப் பாடிய சிறப்புப்பற்றி இவர் வெறிபாடிய காமக் கண்ணியார் என வழங்கப்பட்டார்.

(மே - ள்.). 2'மறைந்தவற் காண்டல்' என்னும் தலைவி கூற்று நிகழ்த்துமாறு கூறுஞ் சூத்திரத்தே 'பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல்' என்பதற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இதனுட் பழிதீர அவன் வந்து உயிர் தளிர்ப்ப முயங்க, நக்க நிலையைத் தோழிக்குத் தலைவி கூறியவாறு காண்க' என்பர் நச்.

3'பிறப்பே குடிமை' என்னும் சூத்திரத்து, 'தன்னசை யுள்ளத்து நந்நசை வாய்ப்ப' என்பது ' இருவர் உணர்வும் ஒத்தவாறு ' எனவும் 4'வினைபயன் மெய்யுரு' என்னுஞ் சூத்திரத்து ‘களிற்றிரை...... வயப்புலி போல' என்புழி, பார்வ லொதுக்கமாகிய வினை பண்பெனப்படாது. என்னை? பண்பென்பது குறிப்பின்றி நிகழும் குணமாகலின் எனவும், பார்வ லொதுக்க மெனப்பட்ட வினைப்பகுதியாற் பிழையாமற் கோடற்குப் பார்வலொதுக்கினின்றா னென்பதும் பிறர்க்கஞ்சிப் பார்வலொதுங்கு


1. முரு, உ௪௨ - உ௪௪, 2, தொல். களவு, ௨௦. 3. தொல். மெய்ப்பாடு, உ௫. 4. தொல். உவமம். ௧௧.