பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

களிற்றியானை நிரை

௬௧




க0) சினைப்பூங் கோங்கின் நுண்தாது பகர்நர்
பவளச் செப்பில் பொன்சொரிந் தன்ன
இகழுநர் இகழா இளநா ளமையஞ்
செய்தோர் மன்ற குறியென நீநின்
பைத லுண்கண் பனிவார் புறைப்ப

கரு) வாரா மையின் புலந்த நெஞ்சமொடு
நோவல் குறுமகள் நோயியரென் உயிரென
மெல்லிய இனிய கூறி வல்லே
வருவர் வாழி தோழி பொருநர்
செல்சமங் கடந்த வில்கெழு தடக்கைப்

உ௦) பொதியிற் செல்வன் பொலந்தேர்த் திதியன்
இன்னிசை யியத்திற் கறங்கும்
கன்மிசை அருவிய காடிறந் தோரே.

- ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்.

(சொ - ள்.) கஅ . தோழி வாழி -

க-க௨. நெடுங்கரைக் கான்யாற்றுக் கடும்புனல் சாஅய் - நீண்ட கரையினைக் கொண்ட காட்டாற்றின் வேகம் மிக்க நீர் அற்றொழிய, அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகல் துறை தண் கயம் நண்ணிய பொழில்தொறும் - விளங்கும் அறலாந் தன்மை கொண்ட விரவிய மணலையுடைய அகன்ற துறையிடத்துள்ள குளிர்ந்த மடுக்கள் பொருந்திய பொழிலிடங்களி லெல்லாம், காஞ்சிப் பசுந் தாது அணிந்த போது மலி எக்கர் - காஞ்சி மரத்தினது அழகிய தாதுக்களைக் கொண்ட பூக்கள் மிக உதிர்ந்துள மணல்மேடுகள், வதுவை நாற்றம் புதுவது கஞல - புதிய மண நாற்றம் மிகா நிற்க, மாநனை கொழுதிய மணிநிற இருங்குயில் - மாவின் தாதினைக் கோதிய நீலமணி நிறத்தினை யொத்த கரிய குயில், படு நா விளியால் நடு நின்று அல்கலும் உரைப்ப போல ஊழ்கொள்பு கூவ - ஒலிக்கும் தனது நாவின் கூவுதலால் நடுநிலைமேவி நாள் தோறும் சில கூறுவன போல முறைகொண்டு கூவ, இனசிதர் சினை பூ கோங்கின் இலவத்து ஆங்கண் உகுத்த நுண் தாது - கூட்டமாகிய வண்டுகள் பூக்கள் நிறைந்த கிளைகளையுடைய கோங்கமரத்தின் மீதிருந்து இலவம் பூக்களாய அவ்விடத்து உதிர்த்த நுண்ணிய தாதுக்கள், பகர்நர் பவளச் செப்பிற் பொன் சொரிந்தன்ன - பொன் விற்போர் பவளச் சிமிழில் பொற் பொடியைச் சொரிந்து வைத்தாலன்னதாக, இகழுநர் இகழா இளநாள் அமையம் - பிரிவால் எய்தும் துயர்களைப் புறக்கணித்துப் பிரிவோரும் அங்ஙனம் இகழ்ந்து பிரிய வொண்ணாத இவ்விளவேனிற் காலத்தை யன்றோ?

க௩-௬. செய்தோர் மன்ற குறி என - தாம் மீண்டு வருங் காலமாக உறுதியாகக் குறித்தல் செய்தார் என்று கூறி, நீ நின் பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப - நீ நினது நோதலையுடைய மையுண் கண்கள் நீர் வடிந்து சொரிந்து கொண்டிருக்க, வாராமையின்