௭௬
அகநானூறு
[பாட்டு
வருந்தி, இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் - தன் இனத்தினின்றும் நீங்கும் களிற்றைப்போல் மீண்டான், இன்றும் தோலா ஆறு இல்லை - அவன் இன்றும் வந்து நமக்குத் தோலாதிருத்தல் இல்லை;
கஅ-௨௦. சாய் இறைப் பணைத்தோட் கிழமை - நமது வளைந்த சந்தினை யுடைய பெரிய தோளின் உரிமை, தனக்கே மாசு இன்று ஆதலும் அறியான் - தனக்கே குற்றமின்றி யுளதாதலையும் அறியானாய், ஏசற்று - வருந்தி, என் குறைப் புறனிலை முயலும் - என்னால் அடையலாம் காரியத்திற்கு என்னை இரந்து பின்னிற்றற்கு முயலும், கண் அண் ஆளனை யாம் நகுகம் - நம்முன் வந்துறும் அத் தலைவனைப் பழித்து மகிழ்வோம்;
கஎ. தோழி நாம் சென்மோ - தோழி நாம் செல்லுவோமாக.
(முடிபு) தோழி! பூணன் வந்து பணிமொழி பயிற்றி எம் அணங்கியோய்! நீ யாரையோ உண்கெனக் கவையினனாக, கைபிணி விடாஅ ஒரீஇ நின்ற என் உரத்தகைமையின் சொல்ல வல்லிற்று மிலன் பெயர்ந்தோன்; இன்றும் தோலாவா றில்லை; அண்கணாளனை நகுகம் நாம் சென்மோ.
(வி-ரை.) 'புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள, இரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றி' என்னும் இக் கருத்து. 1'ஒன்று, இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும், உலகம், புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன்' எனக் கலியுள்ளும் வருவது காண்க. குளிர்-கிளி கடி கருவியுள் ஒன்று ; 2தழலும் தட்டையும் குளிரும் பிறவும், கிளி கடி மரபின' என்றார் பிறரும். குளிர், ஈரமும் ஆம். மதனில என்ற நொய்ம்மையால் மகளிர் நொய்ம்மை கூறப்பட்டது. உண்கு - நுகர்வேன். உள் அறிதல் - உள்ள நெகிழ்ச்சியை அறிதல். உள்ளில் கடிய கூறி என்றது, உள்ளத்தில் அன்பு வைத்தே புறத்தே கடுமொழிபோற் றோன்றக் கூறி என்றபடி. இன்றும் தோலாவா றில்லை யென்றது, அவன் இன்றும் வந்து நம் கருத்தினை யறியாது திரும்பிச் செல்வான் என்றவாறு. புறனிலை - பின்னிற்றல், தாழ்ந்து நிற்றல். கண் அண்ணாளனை எனக் கூட்டுக. தலைவியின் உள்ளக் கருத்தினை அறிதற்குத் தோழி தனது சிறுபுறம் கவையினாக எனப் படைத்து மொழிந்து, அவன் குறையினைத் தலைவி விரும்பி ஏற்றுக் கொள்ளவேண்டு மென்பாள், அண்கணாளனை நகுகம் சென்மோ என்றாள் என்க. இச் செய்யுள் தலைமகள் கூற்றெனின், தோழிக்கு அறத்தொடு நிற்றலாகும்.
(மே - ள்.) 3அறக்கழி வுடையன' என்னுஞ் சூத்திரத்து - சிறு புறங் கவையினனாக...கைபிணி விடாஅ ' என்பதனைத் தலைவி மறைபுலப்படுத்தல் வேண்டி, தன்னை அவன் நயந்தான் போலத் தோழி கூறிய வழு - வமைதிக்கு எடுத்துக் காட்டினர் நச்.
1. குறிஞ்சிக் கலி, கக. 2. குறிஞ்சிப்பாட்டு, ௪௩, ௪௪. 3. தொல், பொருளியல். உ௪.