உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

களிற்றியானை நிரை

௮௫


மயக்கி, நாட்காலத்தே எல்லாருங் காணக் கயத்தை உழக்குகின்றாற்போல, நின் பாணனுடைய நெஞ்சு வலிதாய்ப் புறம்பு மெல்லிதா யிருக்கின்ற இன்சொல்லாலே, அப் பரத்தையர் நலத்தை நுகர்ந்து, அப் பரத்தையர் தாய்மார் நெஞ்சு வருந்த அவ்விடத்தை விடாத அன்புடனே போந்து, நாங்கள் நுமது நிறங்கண்டு வருந்த இங்கே வந்து, குவளை மலர் சூழ்ந்த வள்ளைபோலும் எங்கள் சுற்றத்தார் மயங்க, அவர்களை வருத்தி, ஊரை யெல்லாம் இப்படி எல்லாரு மறியக் கலக்குவானொருவ னல்லையோ என்றவாறு' என்பர் குறிப்புரைகாரர்.

(மே - ள்.) 1'பெற்ற மெருமை ' - நீர்வாழ் சாதியுள் ' என்னும் சூத்திரங்களின் உரையில், நீர்வாழ் சாதியுள் 'போத்து' எனும் சொல் வந்ததற்கு, 'பகுவாய் வராஅற் பல்வரி யிரும்போத்து' என்பதனை எடுத்துக் காட்டினர் பேரா.

37. பாலை

[1. தலைமகள் தோழிக்கு வன்புறை எதிரழிந்து சொல்லியது. 2. பிரிவுணர்த்திய தோழி சொல்லியதூஉமாம்.]


மறந்தவண் அமையார் ஆயினும் கறங்கிசைக்
கங்குல் ஓதைக் கலிமகிழ் உழவர்
பொங்கழி முகந்த தாவில் நுண்துகள்
மங்குல் வானின் மாதிரம் மறைப்ப

ரு) வைகுபுலர் விடியல் வைபெயர்த் தாட்டித்
தொழிற்செருக் கனந்தர் வீட எழிற்றகை
வளியொடு சினைஇய வண்டளிர் மாஅத்துக்
கிளிபோல் காய கிளைத்துணர் வடித்துப்
புளிப்பதன் அமைத்த புதுக்குட மலிர்நிறை

க0) வெயில்வெரி நிறுத்த பயிலிதழ்ப் பசுங்குடைக்
கயமண்டு பகட்டிற் பருகிக் காண்வரக்
கொள்ளொடு பயறு பால்விரைஇ வெள்ளிக்
கோல்வரைந் தன்ன வாலவிழ் மிதவை
வாங்குகை தடுத்த பின்றை ஓங்கிய

கரு) பருதியங் குப்பை சுற்றிப் பகல்செல
மருத மரனிழல் எருதொடு வதியும்
காமர் வேனில் மன்னிது
மாணலம் நுகருந் துணையுடை யோர்க்கே,

- விற்றூற்று மூதெயினனார்.


(சொ - ள்.) கஅ. (தோழி), மாண் நலம் நுகரும் துணையுடை யோர்க்கு - மாண்புற்ற நலத்தினைத் துய்க்கும் துணையினைப் பிரியா தார்க்கு,


1. தொல். மரபு. ௪க : ௪உ.