குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்/அறிவிலே ஆசை

விக்கிமூலம் இலிருந்து

12. அறிவிலே ஆசை

'ஞ்சாவூர்ப் பெரிய கோயிலிலே ஒர் அற்புதமான கோபுரம் இருக்கிறது. மிகப் பெரிய கோபுரம். ஆனால் அதை ஒரு கையகலக் காகிதத்திலே போட்டோ எடுத்துவிடலாம். அந்தக் கோபுரத்தின் பெரிய வடிவைச் சிறிய அளவில் அந்தப் போட்டோ காண்பிக்கும். இதைப்போலக் குழந்தையையும் வயது முதிர்ந்த ஒரு மனிதனுடைய சிறிய போட்டோ என்று நினைப்பது முற்றிலும் சரியல்ல. குழந்தையிலிருந்துதான் மனிதன் உருவாகிறான். அந்தக் குழந்தைப் பருவத்திலேயே முழு மனிதனுடைய பல தன்மைகள் விதை போன்ற நிலேயிலே மறைந்து நிற்கின்றன. அப்படியிருந்தாலும் வயது முதிர்ந்தவனிடம் நாம் எதிர்பார்க்கும் நடத்தை முதலியவைகளைக் குழந்தைகளிடம் எதிர்பார்க்கக்கூடாது. குழந்தையின் உலகமே வேறு. அதன் எண்ணங்களும், கற்பனைகளும் பலவகைகளில் தனிப்பட்டவை.

பெரிய சத்தத்தைக் கேட்டால் குழந்தை பயப்படுகிறது என்று சொன்னோம். இந்தப் பயம் பிறவியிலேயே அதற்கு இயல்பாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இதைப்போல இயல்பாக அமைந்துள்ளவற்றிற்கு இயல் பூக்கம் என்று பெயர். மனிதனிடத்திலே பல இயல்பூக்கங்கள் இருக்கின்றன. அவற்றிலே சில குழந்தைப் பருத்திலே மிகச் சிறப்பாக வெளித் தோன்றும் எதையும் பார்த்து அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையை மூட்டும் ஒரு இயல்பூக்கமும் இருக்கின்றது. அதற்கு விடுப்பு (Curiosity) என்று பெயர். குழந்தைப் பருவத்திலே இந்த இயல்பூக்கம் மிகத் தீவிரமாக இருக்கும்.

குழந்தைக்கு இந்த உலகமே புதியது. இதிலுள்ள பல பொருள்களும், காட்சிகளும் அதற்கு ஒரே புதுமை. அவற்றைப் பற்றியெல்லாம் அறிந்துகொள்ள வேண்டுமென்று குழந்தை ஆசைப்படுகிறது. சின்னக் குழந்தை ஒரு பொருளைக் கண்டவுடன் அதைத் தொட்டுப் பார்க்க, கையிலே பிடித்துப் பார்க்க விரும்புகிறது; அதன் பிறகு அதை வாயிலே கடித்துப் பார்க்க விரும்புகிறது. பேசக் கூடிய சக்தி கொஞ்சம் வந்தவுடன் ஏதாவதொன்றைப் பற்றிச் சதா கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறது. இவையெல்லாம் அந்த விடுப்பு என்ற இயல்பூக்கத்தினால் ஏற்படுவன.

இந்த இயல்பூக்கம் வயதாக ஆகச் சற்று மழுங்கிப் போய்விடுகிறது. ஒன்றைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆத்திரம் வயதேற ஏறக் குறைந்துபோய் விடுகிறது. குழந்தையிடத்திலே நன்றாக மேலோங்கி யிருக்கும் இந்த இயல்பூக்கத்தை நாம் போற்றவேண்டும். இதன்மூலம் குழந்தை அறிவு பெறுகின்றது. அதைத் தடைப்படுத்துவது குழந்தையின் அறிவு வளர்ச்சியைத் தடைப்படுத்துவதாகும்.

குழந்தை ஓடிவருகிறது: “அம்மா, ஏன் மழை பேயறது ? அது எங்கிருந்து வர்ரது?" என்று கேட்கிறது. "சூரியனை ராத்திரியிலே காணமே? அது எங்கே போகுது?” என்று இப்படி ஏதாவது கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்குப் பதில் சொன்னால் இன்னும் எத்தனையோ கேள்விகளைக் கேட்கிறது.

பல சமயங்களிலே நமக்குச் சலிப்புத் தட்டிப்போகும். பல சமயங்களிலே நம்மால் பதில் சொல்லவே முடியாது. அதனால் நாம் பொறுமையிழந்து குழந்தையின் இந்த இயல்பூக்கத்தை மழுங்கச் செய்துவிடக் கூடாது. குழந்தைக்குப் புரியும்படி விஷயங்களை விளக்கவேண்டும். தெரியாதனவற்றைத் தெரிந்து சொல்ல வேண்டும்.

விடுப்பு இயல்பூக்கம் அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. அதை நாம் போற்றவேண்டும்.

இந்த இயல்பூக்கத்தைப் போலவே குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் வேறோரு இயல்பூக்கத்தைப் பற்றியும் இந்தச் சமயத்தில் குறிப்பிட விரும்புகிறேன். போகிற வழியிலே ஏதாவது ஒரு கூட்டமிருக்கும். பலபேர் ஆவலோடு அங்கு சென்று பார்ப்பார்கள். வழியில் வருகிற ஒவ்வொருவர் உள்ளத்திலும் மற்றவர்களைப் போலத் தாமும் போய்ப் பார்க்கவேண்டுமென்ற ஆசையுண்டாகும். அவர்களைப் பின்பற்றி இவனும் அந்தக் கூட்டத்தைப் போய்ப் பார்ப்பான். இவ்வாறு பிறரைப் பார்த்துச் செய்யும் இயல்பூக்கத்திற்கு அனுகரணம் என்று பெயர்.

அனுகரணம் முக்கியமாக இரண்டு வகைகளில் நடைபெறும். மற்றவர்களைப் பார்த்து அவர்களைப் போலவே கடந்துகொள்ள வேண்டும் அல்லது பேசவேண்டும் அல்லது பாடவேண்டும் என்றிவ்வாறு மனத்திற் கொண்டு அறிந்தே செய்வது ஒருவகை தன்னையறியாமலேயே பிறரைப் போலச் செய்வது மற்ரொரு வகை குழ்ந்தையிடத்திலே இந்த இருவகையான அனுகரணமும் நன்கு காணப்படுகின்றன. குழந்தை தன்னுடன் பழகுபவர்களைப்போல, முக்கியமாகத் தாய் தந்தையர்களைப்போலப் பல வகைகளில் அறிந்தும் அறியாமலும் பின்பற்றி கடக்கின்றது. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்பது பழமொழி. சொன்னதைச் சொல்லுவதோடு செய்ததையும் செய்யும் குழந்தை. ஒருவர் பாடுவதையோ, நடிப்பதையோ குழந்தை வெகு சுலபமாகக் கற்றுக் கொள்ளுகிறது: கற்றுக்கொண்டு அவரைப் போலவே பாடி அல்லது கடித்துக் காண்பிக்க முயல்கிறது.
குழந்தைக்கு நல்ல பழக்கங்களையும், அறிவையும் உண்டாக்க இந்த இயல்பூக்கம் பெரிதும் உதவியாக இருக்கிறது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதை நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பெற்றோர்களைப் பார்த்துப் பல காரியங்களை அவர்களைப் போலவே குழந்தை செய்ய முயல்கிற்தென்பதிலிருந்து மற்றோரு விஷயமும் புலனாகின்றது. பெற்றோருடைய பேச்சு, நடத்தை எல்லாம் குழந்தைக்கு முன்மாதிரியாக இருக்கின்றனவாதலால் அவற்றிலெல்லாம் அவர்கள் மிக எச்சரிக்கையோடிருக்க வேண்டும் என்று ஏற்படுகிறது. குழந்தையை நன்கு வளர்க்க ஆவல் கொண்டிருக்கும் பெற்றோர்கள் தங்கள் நடத்தையையே, ஏன் வாழ்க்கையையே அதற்கேற்றபடி அமைத்துக் கொள்ள வேண்டும். களைய முடியாத குறைபாடுகளைக் குறைந்த பட்சம் குழந்தைக்குத் தெரியாதவாறாவது மறைத்துக் கொள்ளவேண்டும்.