பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதத்தில் அன்பார்ந்த இவான் இவானோவிச் என்று சௌஜன்யமாகவே அழைக்கத் தொடங்கிவிடுகிறோம். வாழ்க்கையே நம்மை நிர்பந்தித்து, நமது திட்டமிடுதலில் நம்மைச் செய்யத் தூண்டுகின்ற திருத்தங்கள், சிறுகச் சிறுக நம்மில் அகப்பட்டதைச் சுருட்டும் கொள்ளை மனோபாவங்கள் சிலவற்றையும் வளர்த்து விடுகின்றன. இங்கும் கூட, இந்தக் காங்கிரசின்போது, நாம் இடைவேளை நேரத்தில், வெளி வராந்தாக்களில் மேலும் கீழும் - உலாவிக் கொண்டிருக்கும் சமயத்தில், நாம் ஓர் அமைச்சரையோ அல்லது வேறு எவரையோ கழுகுக் கண்களோடு கவனித்துக் கொண்டும், அதே சமயம், அவர் மூலமாக நாம் என்ன காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்று மனதுக்குள் வெகு மும்முர மாகச் சிந்தித்துக் , கொண்டும் இருக்கிறோம். மேலும், நாம் அமைச்சரோடு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, அவரைச் சந்தித்துப்பேச நமக்கு ஒரு வாய்ப்பைத் தருமாறு அவரிடம் கேட்டுக் கொள்ளும்போது, நாம் நம்மை சுப்ரீம் சோவியத் பிரதிநிதி என்று என்றுமே சொல்லிக் கொள்வதில்லை; மாறாக நாம் ஓர் எழுத்தாளர் என்பதை மட்டுமே சொல்லிக் கொள்கிறோம். எழுத்தாளர்கள் கூறுவதை அமைச்சர்கள் மிகவும் செவிசாய்த்துக் கேட்கிறார்கள். சுருங்கச் சொன்னால், நாம் நம்மால் முடிந்த மட்டிலும், எந்த வகையிலாவது காரியங்களைச் சாதித்துக் கொள்ள முற்படுகிறோம், எனவே எழுத்தாளர்களின் வாழ்க்கையொன்றும் கேளிக்கையாகவே இருந்து விடுவதில்லை என்பதை நீங்களே காண்பீர்கள். இந்த உயர் வான மேடையில் நின்று பேசும்போது, நான் சற்றுச் சிரித்துப் பேசத் துணிந்ததற்கு, நீங்கள் என்னைப் பொறுத்தருளுமாறு வேண்டிக் கொள்கிறேன், ஆழமாசுக் கூறினால், நாம் நமது கட்சியின் மாபெரும் மதிநுட்பத்திலும், கட்சி நம்மைச் சாதித்து முடிக்குமா நு கோரும் எல்லாப் பணி களின் சாதனைகளிலும், நாம் அனைவரும் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறோம். மேலும், அன்பார்ந்த பிரதிநிதித் தோழர்களே , நாட்டுக்கும் மக்களுக்கும் தம்மை உண்மையிலேயே அர்ப்பணித்துள்ள பல்லாயிரக் கணக்கான எழுத்தாளர்களைக் கொண்ட இந்தப் படையானது , கலை இலக்கியம் பற்றி நமது மத்தியக் கமிட்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை முற்றிலும் ஏற்றுக் கொள்கிறது; நமது லெனினியக் கட்சியின் கொள்கையை முழு மன தாக ஆதரிக்கிறது . : : : 144 4. - ' . ' . . - . : , :'4டி.-- 1966 361.