பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • *சோவி'?

மாகவும் அன்போடும் மதித்துப் பேசுவார். உண்மையான எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய அருங் குணங்களில் இது மிகவும் முக்கியமானது, இந்த நேர்மையும் நாணய் மும் பக்தியும் தமது எழுத்துக்களில் இல்லாத காரணத் தால்தான், சில எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களை விபசாரம் செய்கிறார்கள்; விலை சாட்டுகிறார்கள்; தம்மையே விற்று விடுகிறார்கள். புதுமைப்பித்தன் தமது எழுத்தின் மதிப்பை உணர்ந்து பேசுவார். அதை விமர்சனம் செய்." தால் கேட்பார். குறைத்துப் பேசுவதாகத் தோன்றினால் சீறியெழுந்து விடுவார், - இதுபற்றி எனக்கு இரண்டு சம்பவங்களைக் குறிப் பிட்டுச் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு தடவை புதுமைப்பித்தன் நான் வேலை பார்த்த பத்திரிகா லயத்துக்கு என்னைப் பார்க்க வந்திருந்தார். அதே சிம்யம் என்னோடு வேலை பார்த்த இன்னொரு - எழுத்தாளரிடம் கட் இரை கேட்பதற்காக, ஒரு பத்திரிகாசிரியரும் வந்திருந் திருந்தார். வந்தவர் புதுமைப்பித்தனைக் கண்டதும் மரி யாதைக்காகவும், உபசாரத்துக்காகவும் , “ நீங்களும் ஒரு கதை எழுதித் தாருங்களேன் என்று தெரியாத்தனமாகக் கேட்டுவிட்டார். என்னவோ கல்யாணத்துக்கு வந்த இடத்தில் பெண் கேட்கிற பாவனையில், அவர். போகிற போக்கில் கேட்டது ஒரு பக்கம்; அந்தப் பத்திரிகாசிரிய ரது பத்திரிகை மூன்றாந் தரமான பத்திரிகை என்பது இன்னொரு பக்கம், புதுமைப்பித்தன் உடனே அந்தப் பத்திரிகாசிரியரைப் பார்த்து, அப்பா , ' நீ என்னிடம் கதை கேட்காதே. என் கதையை உன் பத்திரிகை தாங் காது. என் கதை நெருப்பப்பர், நெருப்பு! உன் பத்திரிகை சாம்பலாய்ப் போகும்! தெரிந்து கொள் என்று ' பதில் கூறினார்'. இந்தப் பயங்கரமான பதிலில், அவர் தமது எழுத்தைப் பற்றி எவ்வளவு தூரம் மதிப்பு வைத்திருத் தார், விசுவாசம் கொண்டிருந்தார் என்பது தெரியவரும், இன்னொரு முறை இரண்டு பதிப்பாளர்கள் புதுமைப் சித்தனைப் பார்க்க வந்திருந்தார்கள். புதுமைப்பித்தன் அப்போது ஒரு கதை எழுதி வைத்திருந்தார். அந்தக் கதை சரஸ்வதியைப் பற்றிய கதை. சரஸ்வதி உண்மையின்