பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

349 கால்டுவெல்


தொண்டி என்பர். ஆனால் ‘துண்டி’ என்பதே சரி, (மேற்குக் கடற் கரையிலும் கூட ‘துண்டி’ அல்லது ‘காடால் துண்து’, கிரேக்கர்களின் ‘திண்டிஸ்’ என்றழைக்கப்படும் துறைமுகம் உண்டு) இத்துறைமுகத்திற்கு சிவகங்கைப் பாளையக்காரனே தலைவன். மருதுக்கள் பல சிறு மரக்கலங்களாகிய தோணிகளைத் தொண்டித் துறைமுகத்திற்கு அனுப்பி, வளைகுடாவில் வந்திறங்கும் அரிசி மூட்டைகளை ஏற்றிச் செல்லும் எல்லாத் தோணிகளையும் பிடிக்கும்படி கட்டளையிட்டான். அவ்வாறு பிடிக்கப்பட்ட அரிசி சிவகங்கை நாட்டிற்குள் அனுப்பப்பட்டது. இந்த அரிசி முற்றுகை இடப்பட்ட அல்லது முற்றுகையிடப்படும் என்று எதிர்நோக்கியிருக்கும் கோட்டைகளுக்குள் இருப்பவர்களுக்கு உணவாகப் பயன்படுத்தப்பட்டது. அதற்குப் பின் லூஷிங்டனின் கட்டளையின் பேரில் பாம்பனில் இருந்த தலைமை ஊழியன் மிகச் சிறந்த காவல் கப்பல்களைக் கட்டுவித்து அதில் படைகளைப் பாதுகாப்புக்காக அமைத்து அப்புதுவிதமான கடல் கொள்ளையைத் தடுக்க அவற்றை வளைகுடாவின் ஓரங்களில் உலாவ விட்டான். அவன் விரைவிலேயே மருதுக்களின் சில தோணிகளைக் கைப்பற்றியும் சிலவற்றைக் கொளுத்தியும் வெற்றி கண்டான். இதனுடைய மற்றொரு நோக்கம் எதிரிகள் கடல் வழியாகத் தப்பி ஓடு வதைத் தடுப்பதேயாகும்.

காளையார் கோயிலைக் கைப்பற்றல்

இப்பொழுது மருதுக்களுக்கு எதிராகத் திட்டங்கள் ஆரம்பமாகிறது. படைத்தலைவன் கர்னல் அக்னியூ மருதுக்களுக்கு எதிராகத் தொகுத்த திட்டங்களுக்குத் திரும்புவோம். முதன் முதலில் தாக்குதலுக்கு இலக்கான இடம் சிறுவயல். இது மருதுக்களின் தலைநகரம். தரைப்படத்தில் ‘செர்ராவெய்ல்’ என்றழைக்கப்பட்டது. ஏறக்குறைய காளையார்கோயிலின் வடக்கே அமைந்திருந்தது. மருதுக்களின் வலிமை உயர்ந்ததும் இந்நகரம் சிறு குறிப்பிற்குத் தகுதிபெற்றது. அதையே அவன் தனது நிலையான இருப்பிடமாக ஆக்கிக் கொண்டான். இங்கு உறுதியான ஊன்று கோலுக்கு வழி செய்வான் என்றும் கற்பிக்கப் பட்டது. எட்டு அல்லது ஒன்பது மைல்களுக்குட்பட்ட அப்படையெடுப்பு பெருஞ்சாலை சிறப்பாக அமைந்திருந்தபோதிலும், அன்று முழுவதும் தொடர்ந்தது. பொதுவாக 1200 அல்லது 1500 மூவடி அகலமுள்ள துண்டு நாடாக அமைந்திருந்தது. ஒவ்வொரு பக்கத்திலும் உயர்ந்த அடர்ந்த காடுகள் இருந்தன. உட்பக்கம் ஒவ்வொரு இடத்திலும் நீர்நிலைகளின் கரைகள் கட்டப் பட்டிருந்தன. சில கரைகள் குறுக்காக அமைந்திருந்தன. அடர்த்தி மிகுந்த பனங்காடுகள் அல்லது சாதாரண மெலிந்த காட்டு