பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகனின் சரிதை

27

கலாம். அசோகன், தான் ஜனங்களுக்குத் தெரிவிக்கக் கருதிய விஷயங்களை இவற்றிலெல்லாம் எழுதவேண்டுமென்று தீர்மானித்தான்.

அசோகன் காலத்தில் கடைசியாக நடந்த சம்பவம் 
பௌத்த
மகா ஸபை

மூன்றாவது மகா சபையாயிருக்கவேண்டும். சிலோன் ஐதிஹ்யத்தில் இந்த மகா சபை அரசனது பத்தொன்பதாமாண்டில் நடந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. இது சரியென்று தோன்றவில்லை. இருபத்தேழாவது அல்லது இருபத்தெட்டாவது பட்டாபிஷேக வருஷத்துக்கு முன் இந்த மகா ஸபை நடந்திருந்தால் அத்தனை முக்கியமான சம்பவம் ஏழாம் ஸ்தம்பசாஸனத்தில் கூறப்படாமலிராது. ஆனதால் ஸபை நடந்தது கி.மு; 240-ல் ஆயிருக்கலாம். இது எவ்வாண்டில் நடைபெற்றதாயினும், மூன்றாவது மகா ஸபை பௌத்த சமயத்தின் வளர்ச்சியில் மிகவும் முக்கியமான துறை என்பதில் ஐயமில்லை. இதை விளக்குவதற்குப் பௌத்த ஸங்கத்தின் முன் சரித்திரம் சற்று உணர்வது அவசியம், இச்சங்கங்களின் வரலாற்றை அடுத்த அதிகாரத்தில் எடுத்துரைப்போம்.

சாஸனங்களில் பிரதிபலித்துக் காணும் தோற்றமே 
அசோகன்
குணம்

அசோகனுடைய உண்மையான உருவமென்று முன்னே கூறினோம். இங்கு அரசனுடைய கொள்கைகளும் மனமும் பளிங்கிற்போல் விளங்குகின்றன ; அவன் உள்ளத்தில் துறவியின் பக்தி சிரத்தையும் அரசனின் ஞானமும் ஊக்கமும் ஒருங்கே கலக்கின்றன. மனிதனாகக் கணித்தாலும் அரசனாகக் கணித்தாலும் அசோகன் மேன்மை குன்றுவதில்லை. அரசனாகக் கணிக்குமிடத்து, அசோகனுடைய போர் செய்யாவிரதமும் மதங்கள் பால் சமமான பார்வை-