திருவாசகத்தேன்/இறைவா, என்னைப் பணிகொள்வாய்!

விக்கிமூலம் இலிருந்து



இறைவா; என்னைப்
பணிகொள்வாய் !


டவுள் மறுப்புக் கொள்கை ஒன்றும் புதியதல்ல. பழைய கொள்கை. சமய நூல்களில் கடவுள் மறுப்புக் கொள்கை உலகாயதம் என்ற பெயரில் மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. கடவுளை மறுத்தல் எளிது. கடவுளை நம்புதல் கடினமான கொள்கை. கடவுளை நம்ப வேண்டும். நம்பிக்கையில் உறுதி வேண்டும். கடவுள் நெறியில் நடத்தலுக்குரிய திண்மை வேண்டும். இடர்ப்பாடுகளைக் கடந்தும் கடவுளை நம்புதல் வேண்டும். ஆதலால் கடவுளை நம்பும் கொள்கை, அக்கொள்கை வழி வாழ்தல் அருமைப்பாடுடைய முயற்சியின் பாற்பட்டது.

அதுபோலவே கடவுள் நெறியில் நின்று வாழ்தலே வழிபாடு. வழிபாடு என்பது உயர் கொள்கை) வழிப்படுதல் என்ற சொல்லே வழிபாடு ஆயிற்று.இறைநிலை இயக்கம்; ஓயாத இயக்கம்; இடையீடின்றி இயங்கும் இயக்கம். இயக்க நிலையில் ஐந்தொழில்கள் நடக்கின்றன. படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்கள் நடத்தும் முதல்தரத் தொழிலாளி- உழைப்பாளி இறைவன். இறைநெறியில் நிற்போருக்குப் படைப் பாற்றல் வேண்டும் இறைவனிடம் உள்ள படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். தாவரங்களின் ஒளிச்சேர்க்கை போன்றதே இறைவனிடம் ஆன்மா நடத்தும் ஞானச்சேர்க்கை. இறைவன் தந்த உலகைக் காக்கவேண்டும். நாளும் தீமைகளுடன் போராடி நல்லவற்றை நிலைநிறுத்த வேண்டும். நன்றல்லாத வற்றை மறக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் அருளாக்கம் கண்டு வாழ்வித்து வாழ்தல் வேண்டும். இதுவே சமய வாழ்க்கை. கடவுள் எல்லாம் செய்வார் என்று வாளா கிடத்தல் இறைநெறி சார்ந்த வாழ்க்கையுன்று.

கடவுளையும் கடவுளின் அருளையும் மறுத்து வாழ்தல் என்பது அறிவுடைமையன்று. கடவுள் இல்லை என்பது எளிதான்் விவாதம். ஆனால், இந்தப் பரந்த உலகியலில் ஒர் ஒழுங்கு (Order) இருக்கிறது. முறைபிறழாத நிகழ்ச்சிகள் (Consistency) இருக்கின்றன. இவை எப்படி? எதனால் நியதி என்று சமய நூல் கூறும். இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் என்ற வரையறை ஏதும் கடவுளுக்கு இல்லை. திருவள்ளுவர், "வாலறிவன்" என்றார். "மூரி முழங்கொலி நீர்" என்றும் "வாசமலர்" என்றும் திருமுறை கூறும். ஆதலால், சமயவாதிகள் பலபடக் கூறும் கடவுள் உருவமும், தன்மைகளைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை! கடவுள் உயர்வற உயர்ந்த பேரறிவு புேராற்றல் வரம்பில் இன்பம்!

மாணிக்கவாசகரும் தொடக்க காலத்தில் கடவுளின் அருளை மறுத்து வாழ்ந்திருப்பார் போலும்! "மறுத்தனன் யான் உன் அருளை" என்று கூறுகின்றார். அங்கனம் மறுத்த்து அறியாமையின் விளைவு என்று ஒத்துக் கொள்கின்றார். அறியாமை என்பது தெரியாமையன்று. முறை பிறழ உணர்தல் அறியாமை. மறுத்து வாழ இயலாத கடவுள் அருளை, மறுத்து வாழலாம் என்பது முறை பிறழ்ந்த செயல்தானே! இறைவா! யானுன் அருளை மறுத்ததால் வெறுத்து ஒதுக்கிவிடாதே. மணி, அதன் மதிப்பினை உணர்ந்தர்க்கும் உணராதருக்கும் ஒளி தரும். நீ, மணி, மணிகளுக்கெல்லாம் சிறந்த மணி. ஆதலால் என்னை வெறுத்து ஒதுக்காதே! நான் உன்னை வெறுத்ததற்குக் காரணம் நான் அல்ல. என்னுடைய வினைத் தொகுதி ஆட்டி வைத்தது. ஆதலால் என்னை ஒதுக்காமல் என் வினைத் தொகுதியை ஒறுத்திடு. எனக்குக் கேடு செய்யும் வினைகளிலிருந்து என்னை மீட்டு எடு! ஆண்டுகொள்: இறைவா, நான் சிறியவன்! வினைத் தொகுதி வசப்பட்டவன். ஐவரொடு போராடி வெற்றிபெற முடியாமல் தவிப்பவன். நீயோ, பெரியோன்! பிறவா யாக்கைப் பெரியோன்! நீ என் வினைகளைப் பொறுத்தாட் கொள்ளுதல் கடமை! நானாக ஒன்றும் செய்யவில்லை என் வினைகள் என்னைப் பொய் நெறியில் இழுத்துச் சென்றன. ஆனாலும் நான் தாய்! சிறு நாய்! நீ ஆட்கொண்டருளினால் உன்னை நினைந்தே வாழ்வேன் மறவேன்; பெரியோனாகிய தீ என் பிழை பொறுத்து என் வினைத் தொகுதியை ஒறுத்து என்னை. மீட்டு எடுத்து ஆண்டுகொள் என்று உருகுகிறார் மாணிக்கவாசகர்.

இறைவா, முன்பே ஒருதரம் ஆட்கொண்டாய் குருந்த மரத்தடியில் ஆட்கொண்டருளினை: அப்போது தான்்் என் உயிரைவே உனக்கு அர்ப்பணிப்புச் செய்தேன்: உரிமைப்படுத்தினேன்! என்னுடைய உடலையும் உனக்கே உரிமைப்படுத்தி உன்னுடைய அடிமையானேன்! அடிமைக்கு ஆர் என்று கூக்குரலிட்டேன். அடிமைக்கு உடைமைகள் ஏது? ஏன்? எதற்கு? ஆதலால் என்னுடைய உடைமைகளையும் உன்னிடமே ஒப்படைத்தேன்! நீ அவற்றையெல்லாம் ஆட்கொண்டபோது கொள்ள வில்லையோ? நீயே என் தலைவன் தியே என் ஆண்டான்: தான் அடிமை இன்று எனக்கு ஓர் இடையூறு உண்டா, இத்து தை ஆனால், இடையூறு வந்திருக்கிறது, வந்து கொண்டிருக்கிறது. தமக்கு அன்பு பட்டவர் பாரம் சுமப்பதற்கென்றே எட்டுத் தோள்களை - வலிமை மிக்க. தோள்களைக் கொண்ட பெருமானே! உனக்கு என்னுடைய அல்லல்கள் தெரியவில்லையா? தெரிந்தும் பாராமுகமாக இருக்கிறாயே! என்று நெக்குருகப் பாடுகிறார் மாணிக்கவாசகர்.

          அன்றே என்றன் ஆவியும்
              உடலும் உடைமை எல்லாமும்
          குன்றே அனையாய் என்னையாட்
              கொண்ட போதே கொண்டிலையோ
          இன்றோர் இடையூறு எனக்குண்டோ ?
              எண்டோள் முக்கண் எம்மானே
          நன்றே செய்வாய் பிழை செய்வாய்
              நானோ இதற்கு காயகமே!

(குழைத்தபத்து- 7)


இறைவா, நாட்டவர் சொல்லக் கேள்வி அழுக்கொடு சேர்ந்தால் நிலம் அழுக்காகும். அழுக்கொடு சேர்ந்தால் தண்ணீர் அழுக்காகும். ஆனால், நெருப்பு: அழுக்கொடு சேர்ந்தால் நெருப்பு அழுக்காகாது. அது மட்டுமல்ல அழுக்கும் தூய்மையாகும் என்பர். திருப்பெருந்துறைப் பெருமானே! உனது கண்களில் ஒன்று அக்கினி, தீ! ஏன் என் ஆணவத்தைச் சுட்டுப் பொசுக்கக் கூடாது? என்னுடைய வினை வளத்தை நீறாக்கக் கூடாது? முழு நீறு ச்ன்ணித்த திருமேனியை உன்டய சிவனே உயிர்கள் செய்த வினைகள் நீறாவதற்காக நீறணிந்து நிற்கின்றாய்! வினையில் நீங்கி நிற்கின்றாய்! விளங்கும் முதல்வனாகி நின்றருள் செய்கின்றாய்! ஊழி முதல்வ! ஒருவ! நீ, நன்றே செய்வாய் என்று நம்பி ஆட்பட்டேன் இறைவா, நீ நன்றுடையாய்! எத்தகைய நன்று? தீமையே கலப்பில்லாத நன்று! திருவருள் நன்று! ஆனால், நீ செய்த நன்றை நன்றெனக் கருதாமல் பிழையென எண்ணினேன்! உன்னுடைய அருளிப்பாட்டில் பிழையே இருக்காது. பிழை இருக்க வழியே இல்லை! ஆயின் என்னுடைய அறியாமையால் பிழையென்று கருதினேன்! நின்னருளைத் துணிந்து மறுத்தேன்.

'சிவாயநம' என்று சொல்லும் பேற்றினை அருளிச் செய்தனை! அன்றே எனது அல்லல்கள் அகன்றன என்று எண்ணியிருந்தேன். ஆனால், அல்லல்கள் அகன்ற பாடில்லை. மீண்டும் மலவாசனை தாக்குகிறது. பாசி படர்ந்த குளத்தில் பாசி அகன்றும் முழுதும் அகலாமல் உடன்புடர்தல் போல என்னை ஆணவம் அடர்த்துகிறது. நெய்க்குடத்தைச் சுற்றிலும் எறும்புகள் மொய்ப்பதைப் போல. வினைகள் என்னை மொய்க்கின்றன. அவா, வெள்ளம் போல் வந்து தாக்குகிறது! இறைவா, இதற்கெல்லாம் என்ன காரணம்? ஆட்கொண்டருளிய நீ, துன்பத்திற்குக் காரணமாகிய உடலை அகற்றாமல் வைத்து வாழவைத்து விட்டாய்! உடல் உள்ள அளவும் மலவாசனை இருக்கத்தானே செய்யும் வினைகளும் நீங்கா இறைவா! என்னை ஆட்கொண்டருளிய நீ என் உடலை நீக்காதது ஏன்?

இறைவா, இன்று என் பிழைகளை எண்ணி வெட்கப் படுகின்றேன்; வருத்தமுறுகின்றேன் ஆட்கொண்டருளிய உன்னையும் பிரித்துவிட்டேன்! திருப்பெருந்துறை சிவனே! நான் பொய்ம்மையுடையேன். ஆயினும் பெரியோனாகிய நீ கருணையினால் என் உடல் புகுந்து இடம் பிடித்து ஆட்கொண்டருளினை! ஆயினும் நின் கருணைப் பெருவெள்ளத்தை நினைந்து நினைந்து அழுகின்றேனில்லை. இரும்பின் பாவையனைய நான் ஆண்டருளிய நின்னைப் பிரிந்தேன்! அல்லல்களுக்கு ஆளானேன்! ஆயினும் செத்துப் போனேன் இல்லை! மண்ணில் வாழ் கின்றேன்! விழித்துக்கொண்டிருப்பதாக எண்ணினேன்; பாவித்தேன்! என் உள்ளக் கருத்தை மனத்துள் நின்ற கருத்தை இழந்தேன்! விழித்திருந்தும் இறந்த மூடர்களை இந்த உலகில் கண்டதுண்டா? என்ன செய்வது என்று அறியாம்ல் திகைத்து நிற்கின்றேன்! இறைவா! இனியும் பொறுக்க இயலாது! விடைப்பாகா, உழுத பயனை ஊரவர் உண்டு மகிழ, வைக்கோலைத் தின்று உயிர் வாழும் கிடையை வாகனமாக உடையவனே! உன்னைப் பிரிந்து இனிது இருக்க ஒருப்படேன்! அதனால், இறக்கவும் மாட்டேன்.

இறக்காமையால் தானே மீண்டும் மீண்டும் அல்லல்! இறைவா, உடலை நீங்காது வாழ்ந்திடத் திருவுள்ளம் பற்றினை அப்புறம் ஏன் துன்பங்களைத் தந்து ஒறுத்திடுகின்றாய்! இறைவா நீ, என் உடலை ஒறுத்திடுதல் நன்றோ! நான் உய்வதற்கு என்னை ஒறுத்திடுதல் மட்டும் போதுமா? ஒறுத்தலினால் விளைவது துன்பமே ஆதலால் இறைவா! என்னை ஒருத்தது போதும்! இனிமேலும் ஒறுத்து வருத்தந் தரவேண்டாம்! என்னைப் பணிகொள்! உடல் பணிகளில் ஈடுபட்டால் வினை நீங்கும். துன்பங்கள் தொடரா இறைவா, நீ எனக்கு உடல் தந்தருளியதே, பணி செய்யத்தானே! கண்கள் இயல்பாகப் பிறரையே பார்க்க உதவுகின்றன. இதன் அமைப்பு விதி என்ன? பிறர் நலம் காண முயலுக, பிறரொடு உறவு கொள்க என்பதுதானே! உடற்பொறிகள் அனைத்தின் அமைப்பும் பிறர் நலம் கருதியதாகத்தான் அமைந்துள்ளன. ஆதலால், என்னைப் பணிகொள்! பணி செய்தால் பொறி புலன்கள் அன்பில் தோயும்! எல்லோரிடமும் பணிந்து பணி செய்வதால் தாழ்வெனும் தகைமை வந்து பொருந்துகிறது.

ஆன்மாக்களின் உய்தியையே குறிக்கோளாகக் கொண்ட தலைவனே! தனக்குவமை இல்லாத தலைவனே! நான் என்ன செய்வேன்? இறைவா, நீயே பணித்தருள்! 'இது செய்க!' என்று பணித்தருள்! உன் விருப்பமே என் விருப்பம்! பணித்த வண்ணம் செய்வேன். காலந் தாழ்த்தாது அருள் செய்க! காலம் தாழ்த்திடின் செத்துப் போவேன்! நான் செத்துப் போனால் எல்லோரும் சிரிப்பர்! வேண்டாம் ஐயனே அருள் செய்க!

இறைவா! அனுபவித்த அல்லல்கள் போதும்! இனி மேலும் அல்லல்களைத் தராதே! ஒறுத்திடாதே பணி கொண்டு அருள்செய்! ஒரோவழி நான் பணி செய்ய மறுத்தால் என்னைப் பலரறியக் கூவியழைத்துப் பணி கொள்! பலரறியப் பணி கொள்! பணி செய்தலே வினை நீக்கத்திற்கு வழி! இறைவா, திருப்பெருந்துறை இறைவா அருள் செய்! என்று பாடுகிறார் மாணிக்கவாசகர். அத்திருப்பாடல் இது.

          அடியேன் அல்லல் எல்லாமுன்
              அகல ஆண்டாய் என்றிருந்தேன்
          கொடியே ரிடையாள் கூறாtளம்
              கோவே! ஆ, வ என்றருளிச்
          செடிசேர் உடலைச் சிதையத(து)
              எத்துக்கு எங்கள் சிவலோகா?
          உடையாய் கூவிப் பணி கொள்ளாது
              ஒறுத்தால் ஒன்றும் போதுமே!

(குழைத்தபத்து- 2)