பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

27



ஈரோடு கி.பி. 1871ல் நகராட்சி ஆயிற்று. இந்நகரிலிருந்த பாழடைந்த கோட்டைப் பகுதிகள் நீக்கப்பட்டன.

கோயமுத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த தாராபுரம், ஈரோடு, பெருந்துறை, கோபி, பவானி, சத்தியமங்கலம் வட்டங்களும், காங்கேயம் துணை வட்டமும் அடங்கிய பகுதிகள் பிரிக்கப்பட்டு 17.9.1979 இல் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் போது பெரியார் மாவட்டம் என்று தந்தை பெரியாரின் பெயரில் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.

பெரியார் மாவட்டத்தின் தலைமையிடமாக ஈரோடு நகர் விளங்கி வருகிறது.

காவிரி நதியின் கரையிலுள்ள ஈரோடு நகரில் நமது பண்பாட்டுச் சின்னங்கள் பல இடம் பெற்றுள்ளன.

இனி -

இந்த ஈரோட்டுக்குத் தன் பிறப்பால் தன் ஈடு இணையற்ற தொண்டுகளால் பெருமை சேர்த்த கதாநாயகரைச் சந்திக்கலாம்.


3. பெரியாரைப் பெற்றெடுத்த பாக்கியசாலிகள்...

"மற்றவர்களிடம் பழகும் விதத்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்."

- தந்தை பெரியார்