பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

135


29. அறிவியல் மேதை தந்தை பெரியார்

"மந்திரியாவதைவிட, முதல் மந்திரியாவதைவிட, கவர்னராவதைவிட, கவர்னர் செனரலாவதை விட அதற்கும் மேலான மகாத்மா ஆவதைவிட முதலில் நாமெல்லாம் மனிதர்களாக வேண்டும். மனிதர்களாக வேண்டுமானால் முதலாவது பகுத்தறிவு விளக்கமாக ஆக வேண்டும். இயற்கை சிந்தனா சக்தி வளர்க்கப்பட வேண்டும்."

- தந்தை பெரியார்

'பொதுத் தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லைகள், அவன் தனது இலட்சியத்திற்குக் கொடுக்கும் விலை' என்பது பெரியாரின் கருத்து. தோல்வியைக் கண்டு அவர் துவண்டதில்லை. உயர்ந்த பதவியை வகிக்க வேண்டுமென்கிற ஆசையே பெரியாருக்கு என்றுமே இருந்ததில்லை. 1939 -ம் ஆண்டு ராஜாஜி பதவி இழந்தபோது, சென்னை மாகாண ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு பெரியாரிடம், வைசிராயும், கவர்னரும் கேட்டுக் கொண்டனர்.

பெரியார் பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதே போல் சென்னை முதல் மந்திரிப் பதவி இருமுறை பெரியாரைத் தேடிவந்தது. இராசகோபாலாச்சாரியாரே, வற்புறுத்தினார்.

தனக்கு எந்தப் பதவியுமே வேண்டாம் என்று கூறிவிட்டார்.