பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

157

3) நாங்கள் எங்களது எஜமானியிடம் போய்ச் சேருவதற்கு எங்களுக்கு அனுமதி அளித்து பயணப்படியும் வழங்குமாறும், கோட்டை அறையில் உள்ள எங்களது மன்னரது சாமான்களை எங்களுடன் அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

4) எங்களது மன்னரது நினைவாக இரு நினைவுச் சின்னங்கள் அமைக்கப்படல் வேண்டும். ஒன்று இராமநாதபுரத்தில், மன்னர்களது மரபினைப் பின்பற்றி இந்த மன்னரது முன்னோர்களது சமாதிகளின் அருகில், இவரது அஸ்தியும் புதைக்கப்படும் இடத்திலும், இன்னொன்று இந்த சென்னையில் மன்னரது சடலம் தகனம் செய்யப்பட்ட இடத்திலும்.

5) இறுதியாக, இந்த சடங்குகளுக்கான செலவு தொகையையும், கட்டுமானத் தொகையையும் உடனடியாக ஒதுக்கீடு செய்து வழங்கப்படல் வேண்டும்.

5) மேலும், இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டியதாக உள்ளது. இறந்த மன்னரது வாழ்நாளில் வழங்கப்பட்ட பராமரிப்புத் தொகை அவரதுபட்டமகிஷி ராஜராஜேஸ்வரி நாச்சியாருக்கும் அவரது மகள் சிவகாமி நாச்சியாருக்கும், இராமநாதபுரம் அரண்மனை அந்தப்புரத்தில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும், தொடர்ந்து வழங்கப்படும் தொகை ராணி மங்களேஸ்வரி நாச்சியாருக்கு அனுமதிக்கப்படும் வருட பராமரிப்புத் தொகையிலிருந்து கொடுக்கப்படுகிறது. இராமநாதபுரம் மன்னர் மரபினரது பாரம்பரிய வம்சாவளியையும் வரலாற்றையும் ஆய்வுசெய்தால் இராமநாதபுரம் ஜமீன்தாரியின் உரிமை எந்தவகையிலும் ராணி மங்களேசுவரி நாச்சியாருக்கு பொருத்த மற்றது என்பதும் புரியும்.

எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின்படி எங்களது எஜமானி, மன்னரது மறைவைத் தாங்க இயலாத நிலையில் தீக்குளிப்பதற்கு முடிவு செய்தார் என்றும், அவரை கர்னல் மர்ட்டினல் மிகவும் ஆறுதல் சொல்லி தடுத்துவிட்டார் என அறிகிறோம். மேலும் மன்னரது அஸ்தி இராமநாதபுரம் வரப்பெற்றவுடன் அதனைக் கைப்பற்றி, அவரே உரிய சடங்குளைச் செய்ய