பக்கம்:நாடகக் கலை 2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

வந்து நிற்கிறான். அவன் கைகளிலே மண்வெட்டி; கண்கள் நீரைச் சொரிகின்றன. வாழ்ந்த வாழ்வை எண்ணுகிறான். வழி தவறிச் சென்ற தனது மந்த மதியையும் நொந்து கொள்ளுகிறான்.

இந்த நிலையிலே வருகிறான் கண்காணிக்கும் மேஸ்திரி. பார்க்கிறான் அழுது கொண்டிருக்கும் தொழிலாளியை. வந்து விட்டது கோபம்!..... கையிலிருந்த சாட்டையால் கதா நாயகனைக் கண் மூக்குத் தெரியாமல் அடிக்கிறான். வீறிட்டலறுகிறான் கதாநாயகன். வெறி கொண்டவன்போல் மேலும் வீசுகிறான் சாட்டையைக் கண் காணிப்பவன். இந்தச் சந்தர்ப்பத்தில் பழைய செருப்பொன்று பறந்து வந்து கண்காணிப்பவரின் முகத்திலே விளையாடி விழுகிறது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான் கண்காணி. எதிரே சபையில் சலசலப்பு!—கம்பீரமான ஒரு குரல் "நிறுத்துடா அயோக்கியப் பயலே" என்றது.

நடந்தது இதுதான். —கதைப் போக்கிலும் உயர்ந்த நடிப்பிலும் உள்ளத்தைப் பறி கொடுத்துத் தன்னை மறந்திருந்த ஒரு பெரிய மனிதர் மேடையில் நடப்பதை நாடகமாக எண்ணவில்லை. கதாநாயகன் மேல் அனுதாபங் கொண்டார். தன் காற்செருப்பைக் கழற்றி வீசினார் கண்காணி மேல்.

அருகிலிருந்த நண்பர்கள் அந்தப் பெரிய மனிதருக்கு உண்மையை உணர்த்தினார்கள். நடிகனிடம் பெரு மதிப்புக் கொண்ட வேறு சிலர் அவரது தவற்றைக் கண்டிக்க முற்பட்டார்கள். உடனே மேடை மீது கண்காணியாக நடித்த நடிகர் பணிவோடும் புன்னகையோடும்,.....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/85&oldid=1550632" இலிருந்து மீள்விக்கப்பட்டது