பக்கம்:நாடகக் கலை 2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

வார்த்தைகளை அழுத்தமாகச் சொல்லாவிட்டால் என்ன சுவையிருக்கும் எண்ணிப் பாருங்கள். ஆகவே கதைப் போக்கையும் உரையாடலையும் நன்கு தெரிந்து கொண்டு வார்த்தைகளை இடமறிந்து கருத்தறிந்து பாத்திரத்தின் பண்பறிந்து அழுத்தமாகவும் மென்மையாகவும் பேச வேண்டியது அவசியமாகும்.

மற்றொன்று: வார்த்தைகளை எப்போதும் தெளிவாகச் சொல்ல வேண்டும். அவலச்சுவை தோன்ற நடிக்கும் போது சில நடிகையர் உண்மையாகவே அழுதுவிடுவார்கள். அழுதால் பேச்சு தெளிவாக வராது; அதுவே இயற்கை. ஆனால், மேடையில் பொய்யாகத்தான் அழவேண்டும். அழுகை, நடிப்பாக இருந்தால்தான் பேச்சும் தெளிவாக இருக்கும். கோபம், ஆவேசம் எந்த உணர்ச்சியிலும் வார்த்தை தெளிவாக இருப்பது அவசியம். இல்லாவிட்டால் கதைப்போக்கு புரியாது போக நேரலாம்.

நடிப்பின் வெற்றி

அடுத்தபடியாக நினைவாற்றல். இங்கேதான் சற்று விரிவாக விளக்க வேண்டியது என் கடமை. இப்போது உங்களுக்கு நல்ல நாடகக் காட்சி ஒன்றைக் காண்பிக்கப் போகிறேன்.

ஒரு தேயிலைத் தோட்டம். கோடை வெயில் கொளுத்துகிறது. தொழிலாளர்கள் பலர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களிடையே நாடகத்தின் கதாநாயகன்; அவனும் இப்போது ஒரு தொழிலாளி. நல்ல சீமானாக வாழ்ந்தவன். நடத்தை தவறியதின் விளைவு, நாடு விட்டுப் பெண்டு பிள்ளைகளைப் பிரிந்து இறுதியில் தோட்டத் தொழிலாளியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/84&oldid=1550039" இலிருந்து மீள்விக்கப்பட்டது