பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. திக்குவிசயன் தெய்வப்பணி. 43

அவனுக்குப் பின்னர் இரண்டு புதல்வியர் பிறந்தனர். அவர்க்கு முறையே ஈசுரவடிவு, துரைக்கண்ணு என்று பெயர். ஆக ஐந்து மக்களைப் பெற்று அறுமுகக்கனி அரசனது ஐம்புலன்களுக்கும் இன்பநிலையமாய் இனிது அமர்ந்திருந்தாள். அன்புயர் மனைவியும், இன்புறு மக்களும் இனிது குழ்ந்திருப்ப அரிய போகங்களை நுகர்ந்து அறம்பல புரிந்து குடிகள் மகிழ இவர் படிபுரந்துவந்தார். முதல் மனைவியாகிய ஆறுமுகக்கனி யோடு பொம்மு அம்மாள், போடம்மாள், காந்திமதியம்மாள் என்னும் மனைவியர் மூவரும் இம்மன்னனுக்கு இன்னுயிர்க் துணைவியராய் இனிதமர்ந்திருந்தார். தேவியர் நால்வரும் ஆவியென அமைந்து கோவிைேடு மேவிக் குலாவி வந்தனர்.

குமரர் மூவரும் கலைகள் பல பயின்று தலைமையோடு தழைத்து வளர்ந்தனர். வில்வலியிலும், மல்வலியிலும், வாள் வேல் முதலிய படைக்கலப் பயிற்சியிலும் பரிபூர்தலிலும் சிறந்து அரியிளங் குருளைகள் போல் ஆண்மை மீக்கூர்ந்து அவர் மேன்மையுற்றுவந்தார். பருவம் அடைந்து உருவிலும் அறிவிலும் சிறந்து கண்கவர்வனப்போடு கனிந்து கின்ற மூத்த மகனுக்கு வீரசக்கம்மாள் என்னும் கன்னியை மணம் புணர்த்தி மன்னன் மகிழ்ந்தான். அவள் பேரழகினள். அறிவு அருள் கிறை பொறை அமைதி முதலிய குண நலங்க ளெல்லாம் அவளிடம் குடிகொண்டிருந்தன. அக்குலமகளோடு அமர்ந்து அலகில் போகங்களை துகர்ந்து இத்தலைமகன் உளம்மகிழ்ந்து வந்தான். அதன்பின்பு பின்னவரிருவருக்கும் செளந்தரவடிவு, ஞானமுத்தம்மாள் என்னும் மங்கையர் இருவரையும் முறையே மணம் புரிவித்துச் சின்னட் கழிந்த பின் எங்காளும் இல்லாதவகையில் முன்னவனுக்கு மன்னன் முடிசூட்ட விழைந்தான்.

பட்டம் குட்டியது.

நல்லநாளில் மாமறைப்படி கோமகனுக்கு மங்கலரோட்டிக்

கிளைகளும் குடிகளும் உளம் மகிழ்ந்து எத்த உலகம் அறிய