பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

3 மதியொன்று வழக்கை மாற்றுதற் காக
வாயிதாக் கொடுவென வாக்கால் கேட்டுக்
காயித மெழுதிக் கடிதினிற் கொடுத்தேம்.
“திருமந் திரநகர் சென்றிடேன் என்று நீ
ஒருமொழி தந்திடின் உன்னிய தளிக்கிறேன்."
என்றான் : வக்கீல் என்முகம் பார்த்தனர்.
"நன்றே அவனுரை ! நாவாய்ச் சங்கமும்
மனைவி மக்களும் மற்றும் பலவும்
நினையா தொழியென நிகழ்த்திய தொக்கும்"
என்று நான் கூறிட இயம்பினர் அதனை.
"நன்று, வாயிதா நாளை " என்றான்.
இயம்பிய சிலரோ டேகி இறுதியில்
இயம்பினேன் சிற்சில இருந்தவர் இயம்பென.
காலையில் என்னகர் கருதிச் சென்றேன்.
சீலர் அனேகர் ஸ்டேஷனில் நின்றனர்.

 

! மதி - பதினைந்து நாட்கள்.

73