இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பீலில் தண்டனை குறைவு
சென்னைஹைக் கோர்ட்டில் என்னுடைய அப்பீலில்
தரமுயர் வெள்ளை ஜட்ஜுகள் இருவர்
பின்னி தண்டனை மன்னுக என்றும்
ஆனால் சிவத்தைத் தூண்டிய தற்கோர்
ஆறு வருஷம் அந்தமான் தீவும்
நான் மொழிந்ததற்கு நான்கு வருஷம்
அந்தமான் தீவும் அருளுடன் அளித்தனர்.
உடனே ஜெயிலர் திடனுறச் செக்கினைத்
தள்ள அனுப்பினன், தள்ளினேன் சிலநாள்
முன்னர்யான் மொழிந்த தன்மைப் படியே.
124