பக்கம்:பிள்ளைக்கலி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


லானேன். அவர் வேறு இடத்தில் புது வைப்புத் தேடி அன்பு மாறிவிட்டாரோ, அல்லது அவளுடைய ஒழுக்கத்தில் ஏதேனும் குறை இருக்குமோ, திருமணம் செய்த தொடக்கத்திலேயே அன்பு இருந்திருக்காதோ என்றும் பலவாறு எண்ணிக் கலங்கினேன். தொடக்கத்தில் அன்பு இல்லாமல் திருமணம் செய்தும் படிப்படியாக அன்பு வரவில்லையா ? தொடக்கத்தில் அன்பு நிறைந்திருந்தும் பிறகு வாழ்க்கை கெடவில்லையா? செல்வர்களின் விட்டில் அன்பு வளர்வதற்குப் பட்டும் பொன்னும் காரணமாக இருப்பதுபோல், ஏழைகளின் வீட்டில் அன்பு வளர்வதற்குக் காரணம் ஒன்றும் இல்லையா ? கந்தல் உடுத்து அழுக்குப் படிந் திருந்தாலும் அழகும் கவர்ச்சியும் குன்ருத அந்த இரண்டு குழந் தைகளால் அன்பு வளர முடியாதா?-இந்தக் கேள்விகளும் என் உள்ளத்தில் எழுந்தெழுந்து கலக்கின. இந்தக் கலக்கத்திற்கு இடையே பஸ்ஸை விட்டு இறங்கி, அந்தச் சங்கத்திற்குச் சென்று சேர்ந்தேன். கலக்கத்திற்கு இடை யில்தான் மேடை ஏறிப் பேசினேன். நினைத்து வந்ததுபோல் அவ்வளவு தெளிவாகப் பேச முடியவில்லை. ஆனால், பேச்சின் முடிவில் தெளிவும் இருந்தது: துணிவும் இருந்தது. 'உலகத்தில் உள்ளவை எல்லாம் என் பரிணுமம் என்று உணர்பவனே ஞானி. உலகத்தில் உள்ள குறைகளை அவரவர் களின் தலைமேல் சுமத்தி விட்டுத் தான் தூயவளுக எண்ணுகிற வன் நாத்திகன். மற்றவர்களின் குறைகளை எல்லாம் தன்மேல் கமத்தி எண்ணி, அவற்றைத் திருத்தும் பொறுப்பும் தானே மேற்கொள்ளுகிறவன் ஆத்திகன். அன்பற்ற கணவன், அன்பற்ற மனைவி, அறிவற்ற தந்தை, அறிவற்ற தாய், திக்கற்ற பையன், திக்கற்ற பெண், பொறுப்பற்ற குடும்பம், மறக்கணித்த சமு தாயம் என்னும் இந்தக் கொடுமைகள் இல்லாத நல்ல நாளை எதிர்பார்த்துத் தொண்டு செய்கிறவனே வீரன். அதற்கு ஏற்ற படி எண்ணக் கற்றுக் கொள்கிறவனே அறிஞன். அந்த நாள் வர நெடுங்காலம் செல்லலாம். ஆளுல் எண்ணு வதற்கு நெடுங்காலம் வேண்டியதில்லை. இன்றே எண்ண முடியும் அல்லவா? இப்போதே எண்ண வேண்டும் அல்லவா? எண்ணுவ, தற்கு ஒரு துணிவு- வீரம்-வேண்டும். அந்தத் துணிவு உடைய விரன்தான் ஞானி. அவன் என்ன எண்ண வேண்டும். அன்பற்ற, அறிவற்ற, திக்கற்ற, பொறுப்பற்ற நிலைகளுக்கெல்லாம் காரணம் சமுதாயத்தில் உள்ள பொருள் வேட்டைதான் என்று எண்ண வேண்டும். அங்கங்கே காண்கின்ற குறைகளுக்கெல்லாம் அவரவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/18&oldid=1395634" இலிருந்து மீள்விக்கப்பட்டது