g 3 விட்டு நகரவில்லை யாதலால் யாரும் எடுத்திருக்க முடியாது. பின் எப்படி அந்தப் பெட்டி மாயமாய்ப் போயிருக்கும் ? வீட்டிலுள்ள சந்து பொந்து எல்லாவற்றையும் பிடாரி சோதனை செய்து பார்த்தாள். ஒன்றும் பயன்படவில்லை; போனது போனதுதான். சட்டென்று பூங்கொடியின் மேல் அவளது சந்தேகம் வந்து நின்றது. அவள்தான் எடுத்திருக்க வேண்டும். திருடி, சாகஸக்காசி, அவளை ஒரு கை பார்க்கிறேன்’ என்று பிடாரி மனத்துக்குள் எண்ணினுள். மறுநாள் பூங்கொடியைக் கூப்பிட்டு, 'இதோ பார்: நிஜத்தைச் சொன்னயானல் பேசாமல் விட்டு விடுகிறேன். நீ ஏதாவது பணம் எடுத்தாயா ?’ என்று கேட்டாள். பூங்கொடி அதற்கு, 'நான் ஒருத்தர் பணத்தையும் எடுக்கவில்லை. பிறத்தி யார் பண்ம் எனக்கு எதற்கு ?' என்ருள். எவ்வளவோ நயத்தி லும் பயத்திலும் கேட்டும் வேறு பதில் அவளிடமிருந்து வர வில்லை. கோருைக்குப் பதினரும் நாள் சடங்கு முடிந்தது. அதற்கு மறுதினம் பிடாரி பூங்கொடியைக் கூப்பிட்டு ‘அடியே, இங்கே பார்! நீதான் பணத்தை எடுத்திருக்க வேண்டும். வேறு யாரும் திருடன் வந்துவிடவில்லை. பணத்தைக் கொடுத்தாயோ இந்த வீட்டில் இருக்கலாம். இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளி யேறிவிடு!’ என்ருள். 'அப்படியே ஆகட்டும். நீ இப்படிச் சொல்ல வேண்டு மென்றுதான் காத்துக் கொண்டிருந்தேன். என் மாமன் இருந்த வீட்டில் அவர் இல்லாமல் கொஞ்ச நேரமும் இருக்கச் சகிக்க வில்லை. இப்பொழுதே போய்விடுகிறேன்' என்ருள் பூங்கொடி. அன்று காட்டில் பூங்கொடியைச் சந்தித்துப் பேசியதிலிருந்து கிருஷ்ணக் கோனுைடைய மனம் ரொம்பக் குழம்பியிருந்தது. காரியங்களெல்லாம் தாறுமாருகச் செய்துவந்தான். பிண்ணுக்கைக் கொண்டுபோய்த் தொட்டியில் போடுவதற்குப் பதிலாகக் கிணற் றில் போட்டான். எருமைக் கன்றுக்குட்டியைப் பசுமாட்டில் ஊட்டவிட்டான். கறவை மாட்டுக்கு வைக்க வேண்டிய பருத்திக் கொட்டையைக் கடா மாட்டுக்கு வைத்தான். தனக்குத் தானே பேசிக்கொள்ளத் தொடங்கினன் : "நாம் இரண்டு பேரும் கிளியாய்ப் பறந்து போய்விடுவோமா? என்று
பக்கம்:பிள்ளைக்கலி.pdf/28
Appearance