உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


சியமாய் வைத்திருக்க வேணுமென்று சத்தியம் வாங்கியிருக் கிறேன். பெட்டியை எங்கேயாவது பத்திரமாய் ஒளித்து வைத்திருக்கும்படி பூங்கொடியிடம் ஒப்புவித்திருக்கிறேன். 'இந்தச் சொத்தை . அடைகிறவன் என்னுடைய மருமகளுக்கு ஒருவித மனக்குறையுமின்றி எப்போதும் சந்தோஷமாய் வைத்திருக்க வேண்டியது. ’’ மேற்படி கடிதத்தைப் படித்துவிட்டுச் சற்று நேரம் யோசித் ததில் கிருஷ்ணனுக்கு எல்லாம் விளங்கிவிட்டது. மாசி மகத் தன்று வீட்டில் ஒருவரும் இல்லாத சமயத்தில் பெருமாள் கோகுர் பூங்கொடியிடம் அந்தப் பெட்டியைக் கொடுத்துப் பத்திரப்படுத் தும்படி சொல்லியிருக்க வேண்டும். மயிலைக் காளே கெட்டுப் போன அன்று, தான் காட்டில் அவளைச் சந்தித்ததன் இரகசியம் அதுதான். . பூங்கொடியும், அவளுடைய சீதனமும் தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்துக்கெல்லாம் மூலகாரணம் மயிலேக் காளேதான் என்பது கிருஷ்ணனுடைய நம்பிக்கை. யாராரோ வந்து நல்ல விலைக்கு அதை வாங்கிக்கொள்வதாகச் சொன்னர்கள். கிருஷ்ணன் அதை விற்க மறுத்துவிட்டான். ஒரு சின்ன வண்டி வாங்கி அதில் மயிலைக் காளையை ஒட்டிப் பழக்கினன். தன்னையும் பூங் கொடியையும் தவிர அந்த வண்டியில் வேறு யாரும் உட்காரு வதற்கு அவன் அநுமதிப்பதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/35&oldid=1395651" இலிருந்து மீள்விக்கப்பட்டது