42
கையில் பிடித்துக்கொண்டு நிற்கிருன். ராஜாதி ராஜனே! ஜாதிக்காய், ஏலம், ஜாதிப்பத்திரி, பாக்கு, வெற்றிலை இத்தனையும் கலந்து, தியாகராஜன் உனக்கு மிகவும் பிரியத்துடன் சமர்ப் பிக்கும் தாம்பூலம் தரித்துக்கொள்.'
பாட்டு முடிந்ததும் நிலவொளி பாயும் வெளிப்பகுதி வரையிலும் வந்து பொன்னுரசல் ஆடுகிறது. நிலவு ராமனுடைய முகத்தில் படிகிறது. சீதையின் வதனத்தையும் சந்திரிகை நீராட்டு கிறது. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் நன்கு பார்த்துக் கொண்டனர். இரண்டுபேரின் உதடுகளிலும் புதிதாக வெற்றிலைச் சாற்றின் சிவப்பு படிந்திருக்கிறது.
ராமன் சிரிக்கிருன். பிறகு சொல்லுகிருன்: 'திருவை யாற்றுக்கு நாம் போகவில்லை; போகாமலே எத்தனை உப சாரங்கள்!”
உஷா காலம். ஒவ்வொரு ஜீவனுக்கும் காவேரி இரண் டாவது தாயாக இருக்கும் சோழவளநாடு. வானப்பரப்பில் முகில் கூட்டங்கள் பிரம்மாண்டமான மத்த கஜங்களைப்போலக் கம்பீரமாக இயங்குகின்றன. சூரியனின் பொன்னிறக் கதிர்கள், முகில் கூட்டத்தால் மறைக்கப்பட்டு விட்டதால் கீழ்வானம் மட்டும் வெளுத்திருக்கிறது. வெகுநாட்களாக மழை முகத்தைக் காணுத பயிர் பச்சைகளும், மாந்தர்களும் எல்லையில்லாத பெரு மகிழ்ச்சியோடிருக்கின்றனர். பட்ட மரங்களின் மேற்பட்டைகளை, வெளியுலகத்தைக் காணத்துடிக்கும் தளிர்கள் சமிக்ஞையோடு வருடுகின்றன. பாசி படிந்த அல்லிக் குளங்களில், ஏதோ தெய்வ சங்கேதத்தை எதிர்பார்த்து மலரக் காத்திருப்பதுபோல, தாமரை யும் குவளையும் காத்துக் கொண்டிருக்கின்றன. அவ்வப்போது வீசும் ஆரவாரமான ஈரக்காற்று, சகல உயிர் வர்க்கத்துக்கும் பிராணவாயுவாக வீசுகிறது. செடிகளும் மரங்களும் ஆடிக் குலுங்குகின்றன; பறவை இனங்கள் கூண்டுக்குள் இருந்து ஊசலாடுகின்றன.
சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்குகிறது. மக்களின் மகிழ்ச்சி சக்ரவாகங்களின் ஆனந்தத்தை வெற்றி கொண்டது. ஆல்ை, பெய்த மழை பெருமழை அல்ல. ஒரு சில துாற்றலோடு நின்று விட்டது. ஆயினும், சில விடிைகளில் பெருமழை பெய்து உலகம் செழிக்கப் போகிறது என்ற நம்பிக்கைக்கு அபாயம் ஏற்படவில்லை. ஊருக்குள்ளே ஜனங்கள், எந்தக் கலைக்கோட்டு முனிவன் மழையோடு நம்மூரை நோக்கி நடந்து வருகிருனே