53 டிருக்கிரு.ர்கள். அதையும் சொல்லிவிட்டுப் போகலாம் என்று எண்ணி வந்தேன்....”* சிதம்பரத்துக்கு மீண்டும் கோபமுண்டாயிற்று. 'எனக்குத் தெரியுமே! சோழியன் குடுமி சும்மா ஆடுமா ? இப்போது யாரையோ துரது விட்டுப் பெரிய இடத்தைப் பிடித்திருக்கு போலிருக்கு. அதற்கு என்னைச் சரிக்கட்டத்தானே வந்தாய் ? இதை முதலிலே சொல்லாமல், கண்ணிலேயே இருந்தது; மனசு அடித்துக்கொண்டது; அம்மா பார்த்துவிட்டு வரச்சொன்குள்’ என்றெல்லாம் ஏன் கதை அளந்தாய் என்று கேட்கிறேன். என் கலியாணத்தைப் பற்றிப் பேச்சு எடுக்காதீர்கள் என்று எத்தனை முறை உங்களுக்கு நான் சொல்லியிருக்கிறேன் ? கலியாணம் செய்து கொள்ளப் போகிறவன் நாளு, நீங்களா ? எப்போது பண்ணிக் கொள்கிறது என்று எனக்குத் தெரியும். பெண் பார்க்கிற துன்பம்கூட உங்களுக்கு வேண்டாம்... நான் சொல்லுகிறது தெரிகிறதா...? ஆமாம்....” என்று படபடவென்று பொரிந்து தள்ளினன். கிழவர் அப்படியே அசந்து நின்றுவிட்டார். 'சரி, இவ்வளவுதானே சேதி? இனி நீ போய்விட்டு வரலாம். எனக்கு ரொம்ப வேலை. இருக்கிறது...... ’’ என்று, அவரை வேகமாக அவ்விடத்தை விட்டு வெளியேற்றும் நோக்கத்தோடு, அவசரத்தைக் காட்டிப் பேசினன். "சரி, அப்பா: நான் போய் வருகிறேன். எனக்காக நீ ஒன்றும் கஷ்டப்படாதே. அப்பா! உன் ஜோலியைப் போய்ப் பாரு” என்று தழுதழுத்த குரலில் சொல்லிக் கொண்டே கிழவர் தள்ளாடித் தள்ளாடி நடக்கலானர். தகப்பஞர் வருத்தத்துடன் போவதைப்பற்றி, சிதம்பரம் லட்சியம் செய்யவில்லை. அறைக் கதவைச் சாத்திக் கொண்டு, சிநேகிதர்கள் இருக்கும் அறைக்கு விரைந்து சென்ருன். கந்தசாமி உடையார் தம்மைக் கடந்து முன்னே போகும் மகனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே தடக்கல்ாஞர். சிதம்பரம் கதவைத் திறந்து கொண்டு வந்த ஒசையைக் கேட்டு, செஸ் ஆடிக்கொண்டிருந்த சிநேகிதர்கள் நிமிர்ந்து பார்த்தனர். "சிதம்பரம் வந்துவிட்டான், ஜார்ஜ் ஆ சாக்த் தொடங்குவோம். என்ன....?
பக்கம்:பிள்ளைக்கலி.pdf/49
Appearance