உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 -ஆழ்ந்த நித்திரையோ ?... 'இல்லை. செத்துப் போய்விட்டான்.” முருகாயி அவன் கைகளே மார்பின்மீது கோத்து வைத்தான். முகத்தில், கண்களில் மொய்த்த சக்களை விரட்டினுள். பிணத்தின் மீது ஒரு துணியை எடுத்துப் போர்த்தி மூடினுள். கடைசியில், .. கடமை என்று ஒன்று இருக்கிறது அல்லவா ?

  • 冰 杯

சிவந்த கண்கள் நீர்த்தாரை பொழிய, தலையில் மேல் துண்டை எடுத்துச் சுற்றிக்கொண்டான் ஆண்டி. மூலையில் கிடந்த மண்வெட்டியை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டான். நனத்து வைத்திருந்த மஞ்சள் துணியில் இருளனைச் சுருட்டி எடுத்து மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு புறப்பட்டான். 'ஐயோ! ... என் ராசா' என்ற குரல் வெடித்தது - முருகாயி கதறிக்கொண்டே பூமியில் விழுந்து துடித்தாள். ஆண்டியின் கால்களைச் சேர்த்துக் கட்டிக்கொண்டு.அவனைப் போக விடாமல் இழுத்தாள். கையில் ஒரு சோகம்: நெஞ்சில் ஒரு சோகம்; காலைப் பிடித்துக் கொண்டு ஒரு பெரும் சோகம்... -ஐயோ. அவன் என்ன செய்வான் ? நின்ற நிலையில் தவித் தான். எல்லா சோகத்துக்கும் குழிபறிக்க, தோளில் தொங்கு கிறதே அந்த மண்வெட்டி, அதனல் முடியுமா ?... ஒரு கை பிணத்தை அணைத்தது. மறு கை மண்வெட்டியின் பிடியை இறுகப் பற்றியது... 'முருகாயி... அழுவாதே புள்ளே...' என்று சொல்லிக் கொண்டே அவனும் அழுதான். அவள் 'ஒ'வென்று கதறியழுதாள். அவள் பிடியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு நடந்தான் ஆண்டி. -அவனுக்கு இத்தனை நாளாய் பிணங்கள்தான் தெரியும். அந்தப் பிணங்களின் பின்னே இத்தனை சோகமா ?... ஐயோ!...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/64&oldid=1395680" இலிருந்து மீள்விக்கப்பட்டது