உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72


கூச்சத்துடன் கடிதத்தில் தன் கைநாட்டை'ச் சாற்றிரு; ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற கடிதம் அது! வேலாயுதம் அந்த நோட்டுப் புத்தகத்தை மடித்து ஒரு நீண்ட கவரில் போட்டு ஒட்டி விலாசம் எழுதினர். இத்தா, இதற்கு ஸ்டாம்ப் ஒட்டித் தபாலில் போட்டுவிடு!...... நாம் கேட்டதை யெல்லாம் தவருமல் கொடுத்து வரும் நொண்டிப் பிள்க் யார், தமக்கென்று ஒரு டும்-விளக்குத்தாளு வாங்கிக் கொள்ளமாட்டார் ? உன்னுடைய ஆசை விரைவில் நிறை வேறும். நான் வரட்டுமா ?” என்று புன்முறுவலுடன் சொல்லிக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டார் வேலாயுதம், அவர் இந்த தொண்டிப் பிள்ளையாரின் பரம பக்தர். மின்சார இலாகாவில் குமாஸ்தா வேலை பார்ப்பவர். காலேயில் ஆபீஸுக்குப் போகும்போதும், மாலேயில் வீடு திரும்பும் போதும் நொண்டிப் பிள்ளையாரைத் தரிச் 1ல் செல்வ. தில்லை. ஆண்டியப்பனிடம் அவருக்கு அலாதியான அன்பும் பரிவும் உண்டு. f 3. வேலாயுதம் எழுதிக் கொடுத்த கடிதாசிக் கவரை உடனேயே தபாலில் சேர்த்துவிட்டு உற்சாகத்துடன் திரும்பி வந்தான் ஆண்டியப்பன். அன்று வெள்ளிக் கிழமையானதால் நொண்டிப் பிள்ளை யாரைத் தரிசிக்க வரும் ஜனக்கூட்டம் அதிகமாக இருந்தது. பக்கத்தில் பூக்கடை போட்டிருந்த அபாஞ்சிக்கு அன்று நிறைய விற்பன. கோவிந்தன் நாயர் பங்க் கடையிலிருந்த தேங்காய் பழமும் வேகமாகப் பறந்துகொண்டிருந்தன. ஆண்டியப்பன் வழக்கம்போல் அந்த அரச மரத்தடிக்குப் பின்னுல் வந்து உட்கார்ந்தான். அதுதான் அவனுடைய குடி யிருப்பு ஸ்தலம். ஒரு துணி மூட்டை, ஒரு கோரைப் பாய், இரண்டு சட்டி, பானேகள்-இவைதாம் அவனுடைய சொத் துகள் சுருட்டி வைக்கப்பெற்றிருந்த பாயின்மீது மூன்று செங்கற்கள் இருந்தன. அவை இப்போது அவனுக்குத் தலையணை யாகப் பயன்படுகின்றன. ஆனல் அந்தச் செங்கற்கள் மூன்று வருஷங்களுக்கு முன்னுல் இந்த நொண்டிப் பிள்ளையாரின் கோயி லாக அல்லவா விளங்கின!. ஆண்டியப்பன் தன் உடம்பை ஒருக்களித்துப் போட்டு அந்தச் செங்கற்களின்மேல் தலையைச் சாய்த்தபடி இன்றைய து.புதிய முயற்சியின் மகிழ்ச்சிகரமான சிந்தனைகளில் மனத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/70&oldid=1395687" இலிருந்து மீள்விக்கப்பட்டது