78
ஐந்தாறு பூக்களைப் பறித்து வந்து பிள்ளையாரின் பாதங்களில் வைத்தான். கோயில் கொண்ட கோலத்தில் வீற்றிருந்த பிள்ளையாரைச் சற்று நேரம் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய விழிக்கடையின் ஒரத்தில் இரு சொட்டுக் கண்ணிர் கசிந்து உருண்டன. கை குவித்த வண்ணம் அப்படியே தரையில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்.
அன்றையப் பகல்பொழுது எப்படிப் போயிற்றென்று அவனுக்குத் தெரியாது. மாலே ஐந்து மணியிருக்கும். ஆண்டி யப்பன் அங்கிருந்து எழுந்தான். தன்னை யறியாமலே தன்னுள் ஏதோ ஒரு புதிய உற்சாகம் முகிழ்த்திருப்பதை அவன் உணர்ந்தான். இதுவரை தோன்ருத ஒரு புதிய யோசனையும் அவனுக்குத் தோன்றியது.
அதோ இருக்கும் அந்த அலுமினியத் தொழிற்சாலையில் போய் ஏதாவது வேலை கேட்டுப் பார்க்கலாமா ?”
ஆண்டியப்பன் கையில் எப்போதும் ஒரு தடியும் ஒரு தகரக் குவளையும் இருக்கும். வேலே கேட்கப் போகும்போது அந்தக் குவளை கையில் இருக்க வேண்டாமே என்று அவனுக்குப் பட்டது. அக்குவளையைப் பிள்ளையார் அருகில் வைத்துவிட்டு வெறும் தடியை ஊன்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.
மறுபடியும் அவன் அந்த அரச மரத்தடிக்குத் திரும்பி வரும்போது இரவு மணி ஏழாகி விட்டது. அவன் மிகுந்த உற்சா கத்துடன் திரும்பி வந்த காரணம், அவனுக்கு அந்த அலுமினியத் தொழிற்சாலையில் நைட்-வாட்ச்மேன் வேலை கிடைத்து விட்டதுதான். மாதம் இருபது ரூபாய் சம்பளம்:
அன்றிரவும் ஆண்டியப்பன் பட்டினிதான். ஆளுல் அவனுக்கு ஏனே பசியே எடுக்கவில்லை. தெருக் குழாய்க்குப் போய் வயிற்றை நிறைத்துக்கொண்டு வந்து படுக்கலாம் என்ற முடிவோடு அந்தத் தகரக் குவளையைக் கையில் எடுத்தான்.
என்ன ஆச்சரியம்! அந்தக் குவளைக்குள் சில நாண யங்கள் கிடந்து கலகலத்தன. அவற்றைக் கையில் கொட்டி எண்ணிப் பார்த்தான்-மூன்றே முக்காலன.
பரபரப்புடன் பிள்ளையாரைக் கூர்ந்து பார்த்தான். அவர் புத்தம் புதிய கதம்ப மாலைகள் இரண்டு போட்டுக்கொண்டிருந் தார். அவர் பாதத்தில் தேங்காய், பழம், ஊதுவத்தி எல்லாம்
இருந்தன.