80
துக்கு நூறு செங்கற்கள் வாங்கினன். பழைய மூன்று செங்கற். களையும் பிரித்து அரசமரத்துக்குப் பின்னல் போட்டுவிட்டு, புதிய கற்களைக் கொண்டு மூன்றடிச் சதுர அளவில் தன் கையா லேயே ஒற்றைக்கல் சுவர் எழுப்பி, மேல் தளமும் அமைத்தான். சேற்றைக் குழப்பிப் பூசி அதற்கு வெள்ளேயும் காவியும் அடித்து அழகுபடுத்தினன். நொண்டிப் பிள்ளையார் இப்போது தாராள மாக உட்கார இடம் கிடைத்துவிட்டது. அப்புறம் சில தினங்களில் அவருடைய பணத்தைக் கொண்டே பூஜைக்கு ஒரு வெண்கல மணி, பூட்டுப்போட்ட ஒர் உண்டியல், ஊதுவத்திக்கலசம், விபூதி டபரா, தாம்பாளத் தட்டு முதலானவை வாங்கிச் சேர்த்தான். நொண்டிப் பிள்ளையாருக்குக் காலை மாலை தவருமல் வடை, சுண்டலோடு படையல் நடைபெற்றது.
வருஷங்கள் ஒன்று இரண்டு என ஒடிக்கொண்டே இருந்தன. நொண்டிப் பிள்ளையார் ரொம்பவும் பெரியவராகி விட்டார். ஆண்டியப்பனும் இப்போது பெரிய மனிதனுகி விட்டான். அவனை எல்லோரும் மரியாதையாக அழைத்தனர். அதனுல் அவன் இப்போது கொஞ்சம் நிமிர்ந்து நடக்கவும் ஆரம்பித்திருந்தான். ஆலுைம் அவன் தனக்கென்று ஜாகை வைத்துக் கொள்ளவில்லை. அரச மரத்தடி ஆண்டியாகவே இருந்து வந்தான். நொண்டிப் பிள்ளையாரைத் தனியே விட்டு அவன் எங்கும் போக விரும்ப வில்லை.
பிள்ளையாரின் உண்டியலில் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்ந்துவந்தது. அவருடைய அன்ருடச் செலவுகளுக்குப் போக மீதத்தை அவன் உண்டியலிலேயே போட்டு வைத்தான். அதிலிருந்து தனக்கென்று ஒரு காலனுகூட அவன் இதுவரை எடுத்துக்கொண்டதில்லை. இரண்டொருமுைற அவனுக்குத் தவிர்க்க முடியாத பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அச் சமயங் களில் அவன் அந்த உண்டியலைச் சபல எண்ணத்தோடு பார்த்திருக்கிமூன். ஒருநாள் பூட்டைக்கூடத் திறந்து விட்டான். உடனேயே அவனுடைய மனச்சாட்சி விழித்துக்கொண்டது. தன் தவற்றை உணர்ந்து அதற்காகப் பல நாள்கள் வருந்திக் கண்ணிர் வடித்தான். இப்போதெல்லாம் அம்மாதிரி எண்ணமே அவன் மனத்தில் எழுவதில்லை. அவனுடைய மனத்தில் ஒரு மிகப் பெரிய ஆசை வளர்ந்து வந்தது. எப்படியும் இந்த வருஷத்தில் நொண்டிப் பிள்ளையாருக்கென ஓர் உறுதியான பெரிய கோயில் கட்டி அதிலே அவரைக் குடியேற்றி வைத்துவிட வேண்டும் என்னும் ஆசைதான் சிது.