உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 9 நடந்து போய்க்கொண்டிருந்தார். ஆயுள் தண்டனை பெற்றுச் சிறையில் பல ஆண்டுகள் இருந்தவன் வெளியே வந்ததும் செய்வதறியாது திகைப்பதைப் போலத்தான் சிவராம பிள்ளேயும் திகைத்தார். - இனி என்ன செய்வது? பேசக்கூட துணைக்கு யாருமில்லை! நேற்றுவரை தாலுகா ஆபீஸ் வேலை இருந்தது. நாளைக்கு ? கொக்கிரக் குளத்து ரோடும் பாலமும் சந்திக்கும் இடத்தில் வந்து நின்ருர் தன்முக இருட்டிவிட்டது. அவரை நோக்கி ஒரு நாய் வேகமாக ஒடி வந்தது. பக்கத்தில் வாலை ஆட்டிக் கொண்டு அவர் மீது விழுத்தது. 'அட, நீ ஏண்டா இங்கே வந்தே ?' என்று வியப்புடன் கேட்டுக்கொண்டே அதைத் தடவிக் கொடுத்தார். அது வாஞ்சையோடு அவருடைய காலை நக்கிக்கொண்டிருந்தது. ஒரு மாதமாக அந்த நாய் அவரை ஒட்டிக்கொண் டிருக்கிறது. ஒருநாள் அவருடைய வீட்டுக்குள் இழைத்து அவர் சாப்பிடுவதையே ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டு தின்றது. அதற்கும் கொஞ்சம் சாப்பாடு போட்டார். பிறகு தினமும் வர ஆரம்பித்தது. கடைசியில் எங்கும் போகாமல் அவருடன் தங்கிவிட்டது. அதை அவர் விரட்டவும் స్త్రవడి. ஒருவருக்கு ஒருவர் துணை. சிவராம பிள்ளை, அவர் குடியிருக்கும் வீடு, அவருடைய தினசரி வாழ்க்கை எல்லாவற்ருேடும் அதுவும் ஒட்டிக்கொண்டது. தினமும் சிவராம பிள்ளை மாலையில் வீடு திரும்பியதும் அவருடைய பொழுது போக்கெல்லாம். அந்த நாயோடுதான். அவருடைய வரவுக்காக இரவில் வீட்டு நடையிலேயே ஆவலோடு காத்திருக்கும். இன்று எப்படியோ அவரைத் தேடிக் கொண்டு ஓடி வந்திருக்கிறது. இப்போதே வீட்டுக்குப் போவானேன்? எப்போதும் மாலையில் வீடு திரும்பும்போது மூக்காண்டி ஐயர் கடைப் பாதாம் அல்வாப் பொட்டலத்தை வாங்கிக்கொண்டு கொக்கிர குளம் ஆற்றங்கர்ை மணலில் உட்கார்த்துதான் ரசித்துச் சாப்பிடுவார். பிறகு அங்கேயே துண்டை விரித்துப் படுத்தால் இரவு மணி எட்டோ, ஒன்பதோ ஆகிவிடும் எழுத்திருக்க, எப்படியும் டவுன் நகரசபைச் சங்கு ஒன்பது ம்ணிக்கு ஊதும். அது ஊதிவிட்டால், சிவராம பிள்ளை மணலைவிட்டு எழுத்து விடுவார். சில சமயங்களில் அவரோடு வேலை பார்க்கும் சுப்பு சாமியும் கூட வருவார். அவர் எட்டும்ணிக்கு மேல் இ --- டார். வீட்டில் அவருக்குப் பொறுப்பு இருக்கிந்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/87&oldid=1395706" இலிருந்து மீள்விக்கப்பட்டது