உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96


நேரம் அவர் கால்மாட்டிலேயே நின்று கொண்டிருந்தது. சிவராம பிள்ளை சீக்கிரத்தில் கிளம்பமாட்டார் என்று தெரிந்த தும் அதுவும் தன்னுடைய இடத்தில் போய் அமர்ந்து கொண்டது. பக்கத்தில் கிடந்த ரோஜாப்பூ மாலை மணம் பரப்பியது. கண்களை மூடிக்கொண்டார். நினைவு, மதுரைக்கும் பட்டணத் துக்கும் ஓடியது. 'டேய் வரமாட்டேண்டா. பயப்படாதீங்க. உங்க துட்டும் எனக்கு வேண்டாம். நான் மானஸ்தண்டா. மானஸ்தன்...' அவருடைய வாய் இப்படிப் பல தடவை முனகிக் கொண்டே இருந்தது. நட்சத்திரத்தின் ஊடே மனைவியின் முகம் தோன்றி அவரைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது. அப்படியே மணலில் படுத்தவாறே கண்களை மூடிக் கிடந் தார். துணைக்கு நாய் கிடந்தது. மறுநாள் அதிகாலையில் கொக்கிரக் குளம் ஆற்று மணலில் பெரும் கூட்டம் கூடியிருந்தது. மணலில் சிவராம பிள்ளை படுத்துக் கிடந்தார். பக்கத்தில் கோட்டின் மீது ரோஜாப்பூ மாலை சிரித்துக் கொண்டிருந்தது. இன்னும் வாடவில்லை! 'யோகக்காரர்டா! நேற்றுத்தான் ரிடையர் ஆனர்: இன்னிக்கு மண்டையைப் போட்டுவிட்டார். வேலை முடிந்தது. கவலையை அனுபவிக்காமலே போய்விட்டார். இதுக்கும் கொடுத்து வைக்கனும்' என்ருர் பக்கத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு தாலுகா ஆபீஸ் குமாஸ்தா. அவருடைய நாய் பக்கத்தில் நின்றவாறே நெஞ்சே வெடித்து விடும்படி ஊளையிட்டு அழுதுகொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/94&oldid=1395713" இலிருந்து மீள்விக்கப்பட்டது