உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 13 சப்பரத்தின்பேரில் தயாராக இருந்த கொட்டாப்புளியை எடுத்தார். அச்சின் நடுப்பாகத்தில் ஏதோ முளையொன்றை ஓங்கியடித்தார். ஒரு புள் தெறித்துக் கீழே விழுந்தது. அடுத்து ரதம் சற்றே அசைந்து கொடுத்தது. அனைவரும் அகன்ற கண் களுடன் குப்பழுத்துப் பாண்டியரை விழுங்கும் மெய்ப்பாட்டில் கவனித்தனர். குப்பமுத்துப் பாண்டியர் காளீசுவரரை வணங்கி, ரதத்தில் ஏறினர். ரதமும் புறப்பட்டது. சிவகங்கைத் தெருக்களில் பவனி வந்து கொண்டிருந்தது. பொழுது சாயும் நேரம். ரதம் கோயிலை நாடித் திரும்பிக் கொண்டிருந்தது. - அப்பேர்து வீதி இறக்கமாக இருந்ததால் ரதம் சற்றே வேகமாக ஓடிவந்தது. கோயிலண்டை நிறுத்த வேண்டி, சிலர் முட்டுக் கட்டைக்கிச் சக்கரங்களில் பொருத்த முயன்றனர். அப்படிப் பொருத்துவதற்கு அமைத்த இரண்டு முட்டுக் கட்டைகளில் ஒன்று வழுக்கி, மற்ருென்றில் நிற்க நேர்ந்ததால் ரதம் திடுக்கிடும்படி அசைந்து நின்றது. அச்சமயம் பலர் பலவித மான பீதிக்குரலெழுப்பி அலறினர். அதற்கு ஏற்ருற்போல் ரதத்தின் மேலிருந்து பலர் தரையில் விழுந்து உருண்டனர். அப்படி விழுந்தவர்களுள் குப்பமுத்துப் பாண்டியரும் ஒருவர். எங்கே? எங்கே அவர் : இரண்டாம் முட்டுக்கட்டையை பொருத்தியதில் இடறிவிட்ட சக்கரத்தில் சிக்கிக்கொண்டு குருதித் திருமுழுக்கிலாழ்ந்திருந்தார். கூட்டம் சூழ்ந்துகொண்டது. மீட்க் முடியுமா அவரை ? குற்றுயிரும் குல உயிருமர்கக் கிடந்த சடு இணையற்ற கலைஞர் குப்பமுத்துப் பாண்டியரை மீட்க முடியுமா அவர்களால் ? ... ----, ------. . . . . . . . . மாறு முத்திரை மோதிரம் கழற்றப்பட்டது. சிதறியோடியி: மணிமுடியையும், செங்கோலையும் கொண்டுவந்து பெ விடம் நீட்டினன் படைத்தலைவன் நயினப்ப சேர் மருதுவும் கண்கலங்க அவற்றைப் பெற்றுக்கொண் குப்பமுத்தாசாரியின் முகத்தில் தெய்வக்கக் மாடியது. திணறி நெளிந்து மடியிலிருந்த கடிதத்தை எடுத்து 8.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/111&oldid=1395730" இலிருந்து மீள்விக்கப்பட்டது