12. வேனில் மலர்கள் நா. பார்த்தசாரதி திருமணத்துக்குப் பின்பு உதவியாசிரியர் சந்திரசேகரனை அப்போதுதான் கவி கமலக்கண்ணன் முதல் தடவையாகச் சந்திக்கிரு.ர். 'உன் திருமணத்துக்கு வர முடியவில்லை, அப்பா. என்ன மன்னித்துவிடு. வாழ்த்து அனுப்பியிருந்தேனே, வந்ததோ?* என்று விசாரித்தார் கமலக்கண்ணன். 'அதனுல் பரவாயில்லே, சார். உங்கள் அற்புதமான வாழ்த்துப் பாடல் கிடைத்தது. இப்போது நான் வந்த காரியம்...' என்று பேச்சை இழுத்து நிறுத்தினர். உதவியாசிரியர். கவி கமலக்கண்ணன் புன்னகை பூத்தார். "புரிகிறது சந்துரு. ஆண்டு மலருக்கு ஏதோ கவிதை வேண்டுமென்று எழுதியிருந்தாயே; அதைக் கேட்பதற்குத்தானே வந்திருக்கிருய். நீ என்னப்பா இன்னும் பழைய மாதிரியே ஆண்டுமலர், சிறப்புமலர் என்று ஊர் சுற்றிக் கொண்டிருக்கிருய்? புதிதாக இப்போதுதான் கல்யாணமாகியிருக்கிறது. வீட்டில் தனியாக விட்டுவிட்டு இப்படி அலைகிருயே அப்பனே! எங்கே யாவது ஒரு மாதம் ஹனிமூன் போய் வரக்கூடாதோ ?” "எங்கே சார், நமக்கு அதற்கெல்லாம் ஒழிகிறது? மலரை நன்முகக் கொண்டுவந்தாலே பெரிய நிம்மதிதான். இந்தத் தடவை மலருக்கு எப்படியும் உங்கள் கவிதை கிடைத்தாக வேண்டும். . கவிஞர் பெருமூச்சு விட்டார். சிறிது நேரம் அமைதியாக மோட்டுவளையை வெறித்துப் பார்த்தபடி இருந்தார். உதவி யாசிரியருக்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை. கவி கமலக்கண்ணனுக்கு வயசு ஐம்பத்திரண்டுக்குே அவர் நைட்டிகப் பிரம்மச்சாரி. நீல அங்கியும் தாடி முகமுமாகத் தாகூர் மறுபிறவி எடுத்து வந்ததுபோல் யளித்தார். நாற்பது வயசுக்குள் உலக நாடுகளெல்லாம் சுற் புகழ்பரப்பி வந்திருந்தார்.
பக்கம்:பிள்ளைக்கலி.pdf/113
Appearance