பொருளதிகாரம் - பொருளியல் கான - எ2 உள்ளுறையாவது பிறிதொருபொருள் புலப்படுமாறு நிற்பதொன்று. அது கருப் பொருள்பற்றிவருமென்பது அகத்திணையியலுட் (அகத்திணை - இய) கூறப்பட்டது. உடனுறையாவது உடனுறைவ தொன்றைச் சொல்ல, அதனானே பிறிதொ பொருள் விளங்குவது. "விளையாட் டாயமொடு வெணமர லழுத்தி மறந்தனன் துறந்த கான்முனை யகைய நெய்பெய் தீம்பால் பெய்தனம் வளர்த்தது நும்மினுஞ் சிறந்தது நுவ்வை யாகுமென் மன்னை கூறினள் புன்னையது நலனே யம்ம நாணுதும் நும்மொடு நகையே விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப வலம்புரி வான்கோடு நரலு மிலங்குநீர்த் துறைகெழு கொண்கநீ நல்கி னிறைபடு நீழற் பிறவுமா ருளவே.” (நற்றிணை - இதனுள் 'புன்னைக்கு நாணுதும்' எனவே, அவ்வழித் தான் வளர்த்த புன்னை யென்றும், ‘பல்காலும் அன்னைவருவள்' என்றுடனுறைகூறி விலக்கியவாறு. பிறவுமன்ன . உவமம் என்பது உவமையைச் சொல்ல உவமிக்கப்படும் பொருள் தோன் றுவது. "வெறிகொ ளினச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக் குறைபடுத்தேன் வேட்டுங் குறுகும் --நிறைமதுச்சேர்க் துண்டாடும் தன் முகத்தே செவ்வி யுடையதோர் வண்டா மரைப்பிரிந்த வண்டு." [தண்டி-தி-உரை) இது வண்டைக்கூறுவாள் போலத் தலைமகன் பரத்தையிற்பிரிவு. கூறுதலின் உள்ளுறையுவம் மாயிற்று. சுட்டு என்பது ஒருபொருளைச் சுட்டிப் பிறிதோர் பொருட்படுதல். தொடிநோக்கி மென்றோளூ நோக்கி யடிநோக்கி யஃதாண் டவள் செய் தது.” (குறள் - தடாஎக) இதனுள் இப் பூப்பறிப்]பேமாயின் வளைகழன்று தோண்மெலிய கடத்தல் வல்லை யாக வேண்டும் என ஒருபொருள் சுட்டித்தந் தமை காண்க. நகையாவது நகையினாற் பிறிதொரு பொருளுணர நிற்றல். அசையியற் குண்டாண் டோ ரேரியர் னோக்கப் பசையினள் பைய நகும்.” [கு நள் - தகத) இதனுள் ஈகையினாற் பிறிதோர் குறிப்புத் தோன்றியவாறுகாண்க.. சிறப்பு என்பது இதற்குச் சிறந்தது. இது எனக் கூறுவதனானே பிறிதோர் பொருள் கொளக் கிடப்பது. {சு) உங்க. அந்தமில் சிறப்பி னாகிய வின்பம் தன்வயின் வருதலும் வகுத்த பண்பே, (பிரதி)-1. காள்முனை. 2. செய்பெய்.
பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/174
Appearance