இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
60 ☐ கனிச்சாறு – முதல் தொகுதி
36 'நமோ ஓம் நமக!
ஓ! ஓ! ஓ 'குமுதமே' தமிழ் தின்னுங் கழுதையே!
ஊர் கெடுக்கும் 'விகடன்' 'கதிரே'!
ஒப்பரிய தமிழென்னும் உண்ணீர்க் குளத்தையே
உழப்புகின்ற எருமைக் குலமே!
ஏ! ஓ! ஆ தித்தரே! 'தினத்தந்தி' 'ராணி' - யால்
எந்தமிழைக் கெடுக்கும் உருவே!
இங்கங்கெ னாதபடி தமிழைப் புதைக்கவே
எழுந்துலவும் இதழ்கள் இனமே!
ஈவோ,இ ரக்கமோ வைக்காதீர்! உங்களுக்
கிருக்கின்ற நமைச்சல் தீர,
எப்படியும் எழுதுங்கள்! எழுதிக் குவியுங்கள்!!
எல்லாமும் இலக்கி யந்தான்!!!
நாவோ,வெண் மூளையோ நக்குவதில், எண்ணுவதில்
நரகலோ இழிவோ என்ன?
நல்லதமிழ் என்பதெது? நல்லநடை என்பதெது?
“நமோ ஓம் 'துக்ளக்' நமக!"
-1971