இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 109
78 இந்திவெறி ஆளுநரை அகற்றியது!
வரும்பயனை நினையாமல், வந்தபயன்
கருதாமல், வல்லார் வாய்ச்சொல்
தரும்பொருளை ஓராமல், பிறங்கடையை
உன்னாமல் தகவில் லாமல்,
பெரும்பிழையை எந்தமிழர் செய்திட்டார்;
அரசியலில் பிழைசெய் திட்டார்!
அரும்புதுமை ஒன்றுண்மை! இந்திவெறி
ஆளுநரை அகற்றிற் றிங்கே!
-1971
79 இந்தியை மாற்றுக!
சிறையுட் புகுத்தியும், சிற்றுயிர் வௌவியும்
செந்தமிழ்ச்சீர்
மறையப் புகுத்திய இந்தியை மாற்றுக!
மாற்றிலிரேல்,
குறையக் கிடத்திய கொம்பொடு போகாக்
குவட் டெருமைக்(கு)
உறையுட் புகுத்திய வாளை உருவுதற்
கோர் நொடியே!
-1971