பக்கம்:கனிச்சாறு 1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  109


78  இந்திவெறி ஆளுநரை அகற்றியது!

வரும்பயனை நினையாமல், வந்தபயன்
கருதாமல், வல்லார் வாய்ச்சொல்
தரும்பொருளை ஓராமல், பிறங்கடையை
உன்னாமல் தகவில் லாமல்,
பெரும்பிழையை எந்தமிழர் செய்திட்டார்;
அரசியலில் பிழைசெய் திட்டார்!
அரும்புதுமை ஒன்றுண்மை! இந்திவெறி
ஆளுநரை அகற்றிற் றிங்கே!

-1971


79  இந்தியை மாற்றுக!

சிறையுட் புகுத்தியும், சிற்றுயிர் வௌவியும்
செந்தமிழ்ச்சீர்
மறையப் புகுத்திய இந்தியை மாற்றுக!
மாற்றிலிரேல்,
குறையக் கிடத்திய கொம்பொடு போகாக்
குவட் டெருமைக்(கு)
உறையுட் புகுத்திய வாளை உருவுதற்
கோர் நொடியே!

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/136&oldid=1513122" இலிருந்து மீள்விக்கப்பட்டது