இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
214 ☐ கனிச்சாறு - இரண்டாம் தொகுதி
143
வெற்றி காண்போம்!
மொழி, இனத்தைக் காவாமல் அரசியலால்
பொருளியலால் தமிழர் நலம் மூள்வதில்லை!
பழிவழியால் - கொள்ளையிடும் பதவிகளால் -
நிலையான இன உரிமை வாய்ப்பதுண்டா?
வழியறியா ஏழையரை - எளியவரை
வளைக்கின்ற கட்சிகளால் விளைந்ததென்ன?
அழிவதன் முன் தமிழினமே ஒன்றிணைந்தே
அழிம்புகளை எதிர்த்திடவே முனைகுவோமே!
குரல்வளையை நெரிக்கின்ற கொடுங்கறுப்புச்
சட்டங்களை ஆள்வோர்கள் வரைந்துகொண்டு
விரல் நுனியை நீட்டிடினும் வெஞ்சிறையில்
தள்ளுகின்ற வல்லாட்சி காணுகின்றோம்!
வரலின்றி வீண்செலவால் பொருளியலும்
நலிகையிலே வறுமையிங்கு நீங்கிப்போமோ?
நிரல்நிரலாய் எழுச்சியுறு போராட்டம்
ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியிங்கு வெற்றிகாண்போம்!
-1988