பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு கரவும் அச்சமும் கண்டிடா தமர்ந்து வேண்டுவ எல்லாம் விருப்பொடுகொடுத்தும் ஆண்டுமகப் பேறுக் கன்புடன் உதவியும் பெற்றநன் மகற்கும் பின்னுற்ற மகற்கும் கற்றன பற்பல கற்பித் தருளியும் பன்னான் அளித்தும் பண்பொடு புகழை முன்னாள் ஆக்கிய முனிவரன் மரபினில் இந்நாள் வந்துநின் றென்னுடை யுளத்தில் எந்நாள் வரினும் இம்மியும் விலகாத் திறத்தொடு சொல்லருந் திருவடி நிதியை அறத்தொடு மெய்ந்நிலை அளித்திட வைத்துள வள்ளிநா யகமெனும் மாபெரும் தவத்தோய்! வள்ளிநா யகனது மாணடி மறவா என்னுடை மனையையும் என்னுயிர் மகாரையும் நின்னடி நிழலில் நிலைத்திடச் செய்க; உலகினுக் கெல்லாம் உயர்ந்த உலகென இலகுமென் தேயத் தின்பமே நல்கும் தருமம் பலவும் தழைத்திடச் செய்யக் கருமம் புரிந்திவண் கட்டுப் பட்டுள என்னையும் என்னுடை இன்னுயிர்ச் சோதரர் தம்மையும் விரைவினில் தளைநீக்கத் தக்க சென்றபல் நாளாச் சிறியேன்.செப்பிய நன்றே தந்திடும் நயமுள வழக்கினை விரைவினில் செய்திட மீண்டிவண் வருக; தரையினைச் சார்ந்து சாற்றரும் மறங்களைத் 60