பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

459


காலமானார். அன்னாரின் சடலம் பூவாளூர் கொண்டு செல்லப்பட்டு, அங்கே எரியூட்டப் பெற்றது. நடிகவேள் எம்.ஆர். ராதா, கோவை, சேலம் நகரங்களிலுள்ள சினிமா ஸ்டூடியோக்களில் மட்டும் நடிக்கலாம் என, ஜாமீன் தளர்த்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத் நீதிபதி என், கிருஷ்ணசாமி ரெட்டியாரால். இந்தியாவில் காங்கிரசல்லாத ஆட்சி நடைபெறும் மாநிலங்களில், தமிழ் நாட்டின் தி.மு.க. ஆட்சியே சிறந்து விளங்குவதாக அய்தராபாத் அ.இ.கா.கமிட்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சி.சுப்ரமணியம் புகழ்ந்தாராம், நாடாளுமன்ற சபாநாயகர் நீலம் சஞ்சீவரெட்டி, மொழி மசோதாவில் தக்க மாறுதல்கள் தேவை என்ற கருத்தைத் தெரிவித்தார். அண்ணா , நாவலர், கலைஞர் முன்னிலையில் தஞ்சையில் கூடி, கடலூர், அண்ணாமலை நகர், திருச்சி முதலிய இடங்களில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைக் கைவிடுவதாக, மாணவர் கவுன்சில் முடிவெடுத்தது.

உலகத் தமிழ் மாநாட்டையொட்டிக் கடற்கரைச் சாலையில் கம்பன், கண்ணகி, அவ்வை போன்றார்க்குச் சிலையெடுத்தது பெரியாருக்கு அறவே பிடிக்கவில்லை. பொங்கலன்று குனியமுத்தூரில் “நமது இழிவை சூத்திரத் தன்மையை நிலைநாட்ட விழாவா? மடமை இலக்கியங்களுக்கெல்லாம் விழாவா? மூடநம்பிக்கை கொண்ட கதாபாத்திரங்களுக்கு வரிசையாகச் சிலைகளா? இதெல்லாம் மக்கள் பணத்தைப் பாழாக்கும் வீண் செலவுதானே?” என்று கேட்டுக், கண்டித்தார் பெரியார். 19-ந் தேதி “விடுதலை”யும், “சென்னையில் மூன்று விழாக்கள் நடந்தன. தேவையில்லாத உலகத் தமிழ் மாநாடு ஒன்று. உடல் வலிமை காட்டும் அகில இந்திய விளையாட்டுப் போட்டி ஒன்று நேரு ஸ்டேடியத்தில் நடந்தது; இது தேவைதான். மூன்றாவதாக அண்ணா நகரில் வர்த்தகத் தொழில் பொருட்காட்சி துவங்குகிறது; இதுவும் மிக அவசியமானதுதான்” என்று தலையங்கம் தீட்டியது.

சுயமரியாதைத் திருமணச் சட்டத்துக்கு 17.1.68 அன்று குடி அரசுத் தலைவர் ஒப்புதலளித்துவிட்ட நல்ல செய்தி கிடைத்தது. சேலம் பி. ரத்தினசாமிப் பிள்ளையின் மாமாங்கப் பண்ணையில் நடந்த மாட்டுப் பொங்கல் விழாவில் பங்கேற்ற பெரியார், “உழைப்பின் பயனைக் கண்டு மகிழ்வுறும் பொங்கல் விழாவே அறிவுக்குப் பொருத்தமான விழா” என்றார். தமக்குப் பொங்கல் வாழ்த்து அனுப்பியவர்களுக்கெல்லாம் “விடுதலை”யில் நன்றியும் தெரிவித்தார். 22.1.68 “விடுதலை” பெரியாரின் பேனா ஓவியங்களால் செறிந்திருந்தது. முதல் பக்கத்தில் இரண்டு பெட்டிச் செய்திகள்; தமிழ்நாடு பிரிந்தாலென்ன? என்னுந் தலைப்பில். தமிழ்நாடு இந்திய யூனியனிலிருந்து பிரிந்து