இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வினையியல்]
23
ஓடு -; உம், ஓடும் குதிரை.
b. வினையெச்சம் --உ, இ, ய், அ, கு, இன், ஆல், கால், என்ற விகுதிகளைப் பெற்று வினையைக்கொண்டு முடிவன வினையெச்சமாம். வினையெச்ச விகுதிகளுள், உ என்பதொழிய மற்றவெல்லாம் காலத்தை யுணர்த்தும். ஆதலின் உ என்பதுள்ள எச்சத்திற்குமட்டும் இடை நிலையுண்டு.
அவற்றுள் : உ, இ, ய் இவைகளைக் கடைசியிலுடையன இறந்தகால வினையெச்சங்களாம்.
உ - ம். வந்து, ஓடி, போய்.
அ, கு என்பவைகளைக் கடைசியிலுடையன நிகழ்கால வினையெச்சங்களாம். உ - ம். படிக்க, படித்தற்கு. இன், ஆல், கால் என்பவைகளைக்கடைசியிலுடையன எதிர்கால வினையெச்சங்களாம். .
உ-ம்.செய்யின்; செய்தால்; செய்தக்கால்.