இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எழுத்தியல்]
33
3.முதலெழத்தின்வகை. -- உயிரும் மெய்யும் என முதலெழுத்துக்கள் இரண்டுவகைப்படும்.
4. சார்பெழுத்துக்கள்.-- உயிர் மெய், குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் எனச் சார்பெழுத்துக்கள் நான்குவகைப்படும்.
முதலெழுத்துக்கள்.
5. உயிரெழுத்து.--அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ என்ற பன்னிரண்டும் உயிரெழுத்துக்களாம். இவை ஆவி எனவும் பெயர் பெறும். உயிரெழுத்து வேறொன்றின் உதவி வேண்டாமல் தானாகவே ஒலிப்பது.
6. குற்றெழுத்து. - உயிரெழுத்துக்களுள் அ, இ, உ, எ, ஒ என்ற ஐந்தும் குறில் எனப்படும். இவை அ, இ என இயல்பா யுச்சரிக்கப்படுவதுடன் அகரம், அகாரம் எனச்சாரியைபெற்றும் வரும்.