இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எழுத்தியல்]
41
க்குக் குற்றியலிகரங்கள் என்று பெயர். இவை உயிரெழுத்துக்களாகிய இகரங்கள் ஒலிக்கும் அளவில் பாதியளவு ஒலியுள்ளதாக ஒலிக்கும்.
உ - ம் . நாடியாது:
இதில் நாடு என்றதில் உள்ள குற்றியலுகரம் யாது என்றதிலுள்ள யகர மெய்யுடன் சேரும்போது இகரமாகத்திரிந்த தாதலின் இதிலுள்ள இகரம் குற்றியலிகரம்.
14. ஆய்தம் - இது குற்றுயிருக்கும் உயிரெழுத்தோடு அல்லது குற்றியலுகரத்தோடு கூடிய வல்லெழுத்துக்கள் ஆறுள் ஒன்றுக்கும் இடையே வரும்.
உ - ம். அஃது:
இதில் அகரமாகிய குற்றுயிர்க்கும் து என்னும் குற்றியலுகரத்துக்கும் இடையே வந்திருக்கின்றது.