இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எழுத்தியல்]
43
தக்குறுக்கம் கால் மாத்திரை யளவு ஒலிக்கும். உயிர்மெய்க்கு மெய் மாத்திரை நீக்கி ஏறிய உயிர் மாத்திரையே மாத்திரையாம்.
க - இதற்கு மாத்திரை ஒன்று: ஏன்?
7. விலக்கு.- பண்டங்களை விற்கும் போதும் ஒருவரை அழைக்கும் போதும் பாடும் போதும் புலம்பும் போதும் எழுத்துக்கள் தமக்குச் சொல்லிய அளவுகடந்து ஒலிக்கும். 18. முதனிலை.-உயிரெழுத்துப் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வரும். மெய்யெழுத்துக்களுள் க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ என்ற ஒன்பதும் உயிரோடு கூடி மொழிக்கு முதலில் வரும். அவற்றுள் க, ச, த, ந, ப, ம என்ற ஆறுமட்டும் எல்லா உயிரோடுங் கூடி மொழிக்கு முதலில் வரும். மற்றவைகளுள்:-