இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எழுத்தியல்]
45
உ - ம். பல, பலா, புலி, தீ,புகு, பூ, தே, வை, நொ, போ, வௌ; உரிஞ், உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ்,வாழ், கேள்; அஃகு.
20. இடைநிலைமயக்கம்:-இடையில் எழுத்துக்கள் ஒன்றோடொன்று மயங்கி வருவதற்கு மயக்கம் என்று பெயர். சில எழுத்துக்கள் உடனிலைமயக்கம் கொள்ளும்; அதாவது தம்மொடு தாமே மயங்கும். சில பிறநிலைமயக்கம் கொள்ளும்; அதாவது தம்மொடு பிறவே மயங்கும். சில தம்மொடும் மயங்கும் பிறவற்றொடும் மயங்கும். (மயங்குதல் = சேர்தல்; மயக்கம் = சேர்க்கை)
a. உயிரெழுத்துக்கள் தம்மொடு தாம் மயங்கா; அவை மெய்யொடு மயங்கும் மயக்கத்திற்கு அளவே யில்லை; அதாவது எந்த உயிரும் எந்த மெய்யுடனும் மயங்கும் என்பதாம். அப்படி-