இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
50
[எழுத்ததிகாரம்
ரத்துக்கு ஐகாரம் போலியாக வரும்.
உ . ம் அரசர் - அரைசர்; மஞ்சு - மைஞ்சு; பயல் - பையல்
ஐ, ய என்ற எழுத்துக்களுக்குப் பின் நகரத்துக்கு ஞகரம் போலியாக வரும்.
உ - ம். ஐ + நூறு =ஐஞ்ஞூறு.
செய் + நின்ற = செய்ஞ்ஞின்ற.
ஐந்நூறு என்பது அஞ்ஞூறு என்றும் வரும்; ஏன்?
____________
பதவியல்.
1. பதம் - எழுத்துக்கள் தனித்தாவது இரண்டு முதலாகத் தொடர்ந்தாவது ஒரு பொருளைத் தெரிவித்தால் அது பதமாம்.
அது பகுபதம், பகாப்பதம் என இரு வகைப்படும். ஆ: இது பசு என்னும் பொருளைத் தெரிவிப்பதால் ஒரு